யாரும் அநாதை
இல்லை என்பதற்காகவே
ஒருவனுக்கு அம்மா அப்பா
என்ற உறவு
என்றான் இறைவன்
பாசத்துக்கு கோயில்
கட்டு என்றான் அவன்
இங்கோ..............
அம்மா அப்பாவால் வந்த
ரத்த உறவுகளை
உடன் பிறப்பாக்கியதால்
காரணமே இல்லாமல்
உறவுகளின் எண்ணிக்கை
அதிகரித்தது
பாசமே பணம் கொடுத்து
வாங்கும் பொருளானது
தரும் பணமும்
பாசத்துக்காய் என்றது
அந்த அறியா மனது
காவலுக்கு விட்டவனே
கூட்டிக் கொடுப்பவனானான்
வாங்கிய கடனை
மீட்க்க முடியாத
அவனால் உறவுகளுக்குப் பணம்
கொடுக்க முடிந்தது
மனைவியைத் தவிக்க
விடவும் முடிந்தது
பணத்தால் ஆரம்பமான
சண்டை
பாசத்துக்கு கட்டுப்பட
மறுத்தது
பணத்துக்காக சேர்ந்த
உறவு தானே
பாதியிலே போனது
மீண்டும் பணம் வரும் வரை...............
பி.கு: இது பாசத்தையோ, பணத்தையோ கொச்சைப் படுத்தும் நோக்கமல்ல. இப்படியும் நடக்கின்றன என்பதற்காகத் தான்.
10 comments:
உண்மையத்தான் சொல்லியிருக்கீக...
அருமையான கவிதை. எதற்காகச் சிறிய எழுத்துக்களில்? பெரிதாக்கிப் படித்துவிட்டேன். அனுபவித்த உண்மைகள்.
"பிரியமுடன்...வசந்த் said...
உண்மையத்தான் சொல்லியிருக்கீக..."
எல்லாம் ஒரு அனுபவம் தான்...
"Subankan said...
அருமையான கவிதை. எதற்காகச் சிறிய எழுத்துக்களில்? பெரிதாக்கிப் படித்துவிட்டேன். அனுபவித்த உண்மைகள்."
உங்களுக்குமா?
அருமையான வரிகள் மட்டுமல்ல சிந்து உண்மையையும் சொல்லி இருக்கிறிங்க.
தமிழர்கள் அனாதைகள் அல்ல அனாதைகழாக்கப்பட்டுக்கொண்டு இருக்கின்றனர்.
ம்ம்ம்ம்ம்ம்ம் என்ன செய்ய முடியும்
நல்லாயிருக்கின்றது கவிதை... பிற்குறிப்பை வாசிக்காமல் கவிதையை மட்டும் இரசித்தேன்..
நன்றி.....................
சிந்து நீ எழுதிற கிறுக்கல்களையும் ரசிக்கிரான்கடி..
என்ன நக்கலா?
//சிந்து நீ எழுதிற கிறுக்கல்களையும் ரசிக்கிரான்கடி..
உண்மையைத்தான் சொன்னனான்.. ஏன் நக்கலாக்கினீங்க..
நானும் உண்மையைத் தான் சொன்னேன்..
Post a Comment