Tuesday, September 22, 2009

சந்தோசம்

இது ஒரு சதாப்தம் முடிந்து தொடங்கும் பதிவு, அதனால் இன்பமான ஒரு விடயம் எழுதலாமே என்று ஆரம்பிக்கிறேன். கவிதையை வாசித்திவிட்டு இது உண்மையிலையே சந்தோசமான கவிதை தானா என்ற சந்தேகம் வந்தால் நான் பொறுப்பல்ல.

வாழ்க்கையில்
பலர் எதிர்பார்க்கும்
அற்புதமான
வசந்தம்
சந்தோசம்

சிலர் வாசலை
மட்டுமே தட்டும்
அறிய
பொக்கிஷம்
சந்தோசம்

வாழ நினைப்பவனை
பணத்தைக் காட்டியே
கொள்ளும்
பேய்
சந்தோசம்

வாழ்க்கையே
ஒரு பகுதி என்று
பலர் சொன்னாலும்
சிலர்கையைஈதொடாத்
........................................
சந்தோசம்

பி.கு: இடைவெளியில் ஒரு சொல்லையோ, சொற்றொடரையோ,
வசனத்தையோ இட்டு கவிதையை நிறைவு செய்க...

6 comments:

சுபானு said...

வாழ்க்கையே
ஒரு பகுதி என்று
பலர் சொன்னாலும்
சிலர் கையை தொடாத்
திரவியம்
சந்தோசம்
??

நீங்கள் எழுதும் கவிதைக்கு நாங்கள் முடிவுரை எழுதுவது சரியாக வராது.. நீங்களே கூறிவிடுங்கள்..
கவிதை நல்லாயிருக்கு.. வாழ்த்துக்கள்...

Sinthu said...

நான் சொல்ல மாட்டேன். உங்கள் முடிவும் நன்றாக உள்ளது. நன்றி.......

சுபானு said...

:)

யோ வொய்ஸ் (யோகா) said...

அதை முடிக்க இயலவில்லை. நீங்களே கூறி விடுங்கள். நான் கூறியது பிழையாக இருந்தால் ”சந்தோஷமாக“ நீங்கள் எழுதிய கவிதை அர்த்தமற்று போய்விடும்.

மற்றபடி அழகான கவிதை

யாரோ ஒருவர் said...

படிச்சதிலே ரொம்ப சந்தோஷம்.

Sinthu said...

நீங்கள் எல்லோரும் கூறுவதால் சொல்கிறேன். தைரியமான மாயவலை சந்தோசம் என்று முடிக்கலாம்.
நன்றி யோக மற்றும் திருமதி ஜெயா சீலன்..