என்ன வாசிக்கிறீங்களா....?
அது வேறு ஒன்றும் இல்லை. எனக்கு வந்த சின்ன சந்தேகம் தான். சின்ன வயதில் அப்பாவின் பெயரை முன்னுக்கு போட்டு எழுதிய நான் காலப் போக்கில் எனது பெயரை முன்னுக்குப் போட்டதும் உண்டு (முதல் பெயரை முன்னுக்கு போட வேண்டும் என்று பலர் சொன்ன காரணத்தால்). அது தான் first name, surname எண்டெல்லாம் இருக்கே. அதன் பின்னர் சொந்தமாக சிந்திக்கத் தொடங்கிய போது அப்பாவின் பெயரையே முன்னுக்கு போடுவதை வழக்கமாக்கிக் கொண்டிருக்கிறேன்.
கல்யாணத்துக்கு அப்புறம் கணவனின் பெயரை பின்னுக்கு போடுவதில் எனக்கு எந்த எதிர்க் கருத்தும் கிடையாது.
இனி
என் கருத்துக்கு வரலாம்....அப்பா என்பவர் இல்லாமல் மகள் என்பவள் ஒரு போதுமே பிறந்திருக்க முடியாது. அது மட்டும் அல்லது எமக்கு முன்பு பிறந்து, எமக்கு பிறப்பைத் தந்த ஒரு நன்றிக் கடனுக்காக நாம் அவரின் பெயரை முன்னுக்கு போடலாமே. எமக்கு என்று பல உறவுகளை ஏற்படுத்தித் தந்த உறவுகளில் அப்பா என்பவருக்கு ஒரு பெரிய பொறுப்பு இருந்தே தீருகிறது. கணவன் என்று பார்க்கும் பொது எமக்கு பின்னர் வந்து சேருகின்ற உறவு. அதுவும் ஒரு 25 or 26 வயதுக்கு அப்புறமாக வரும் உறவு ( இந்த வயதுக்கு முன்னர் கல்யாணம் செய்தவர்கள் அடிக்கக் கூடாது. நான் அப்பாவி பாருங்கோ).
அதனால் முன்பு வந்த உறவை முன்பும் பின்பு வந்த உறவை பின்னும் போடுவது தப்பு இல்லை என்று சொல்ல வாறன். நீங்கள் என்ன செய்ய வாறீங்கள் என்பது எனக்குத் தெரியாது..
உங்கள் கருத்துக்களை ஏற்றுக் கொள்ள நான் தயார்.................... என் கருத்தில் இருக்கும் பிழைகளையும் சுட்டிக் காட்டலாம்..
வாங்கோ வந்து எசிப்போட்டாவது போங்கோ...
6 comments:
nalla eruku
ஓகே, அப்பா இல்லாமல் மகள் இல்லையென்பது சரி. முன்னாலையா பின்னலை அப்பாவின் பெயரை போடுவது என்பது அவர் அவர்களுடைய விருப்பம். எல்லாம் ஒரு பாதுகாப்புக்குத்தான் என்பது வெள்ளிடை மலை.
நீங்க அப் "பாவி" தானுங்கோ......
அப்பாவிண்ட பெயர் இன்னும் எவ்வளவு காலத்துக்கு இருக்குமோ !!!!!!!!
//அதனால் முன்பு வந்த உறவை முன்பும் பின்பு வந்த உறவை பின்னும் போடுவது தப்பு இல்லை என்று சொல்ல வாறன். நீங்கள் என்ன செய்ய வாறீங்கள் என்பது எனக்குத் தெரியாது..//
:) :)
திருமணத்துக்கு முன்போ அல்லது பின்போ தத்தமது பெயரையே முதற்ப் பெயராகப் பாவிக்க வேண்டும் என்பது என்கருத்து..
சிலபெண்கள் திருமணமாகிய பின்பு தமது பெயரினை பாவிப்பதே கிடையாது... கணவனின் பெயரினையே தன்பெயராக இட்டுக் கொள்வார்கள்.
நான் படித்த பள்ளியில் கூட பல ஆசிரியைகளின் பெயர் இன்றுவரை எனக்கு தெரியாது... திருமதி.xxxxxxxx(கணவன் பெயர்) என்றுதான் பெயரினைப் போட்டுக் கொள்வார்கள். இவ்வாறு தன் பெயரினை பாவிக்காது கணவன் பெயரினை மாத்திரம் பாவிப்பது தவறு என்றே நிபுணர்களும் கூறிக் கேள்விப்பட்டிருக்கிறேன்.
ஆனால் தந்தையின் பெயரை தன் பெயராக பாவித்த ஒரு மகளை இன்று வரை நான் பார்த்ததே கிடையாது..
ஆக ஆணோ பெண்ணோ எப்போதும் தத்தமது பெயரினையே முதற்பெயராக இடவேண்டும் என்பது என்கருத்து.
Thanks Niro....
"வதீஸ்வருணன் said...
ஓகே, அப்பா இல்லாமல் மகள் இல்லையென்பது சரி. முன்னாலையா பின்னலை அப்பாவின் பெயரை போடுவது என்பது அவர் அவர்களுடைய விருப்பம். எல்லாம் ஒரு பாதுகாப்புக்குத்தான் என்பது வெள்ளிடை மலை."
என்ன பாதுகாப்பு என்றும் சொன்னால் தெளிவாக இருக்குமே...
"
பிரபா said...
நீங்க அப் "பாவி" தானுங்கோ......
அப்பாவிண்ட பெயர் இன்னும் எவ்வளவு காலத்துக்கு இருக்குமோ !!!!!!!!"
நிறைய காலம் நிலைக்கும் என்று நினைக்கிறேன்.... இப்ப நான் சின்னப் பிள்ளை தானே அண்ணா.....
" கலை - இராகலை said...
//அதனால் முன்பு வந்த உறவை முன்பும் பின்பு வந்த உறவை பின்னும் போடுவது தப்பு இல்லை என்று சொல்ல வாறன். நீங்கள் என்ன செய்ய வாறீங்கள் என்பது எனக்குத் தெரியாது..//
:) :)"
அதுவுமே புரியல்ல...
திவா அண்ணா எங்கள் ஆசிரியர்கள் சிலரை அவர்களின் அப்பாவின் பெயரையும் சொல்லி அழைப்பதுண்டு....
கருத்துக்களுக்கு நன்றி...
Post a Comment