விஞ்ஞானம் வளராமல் மனிதன் ஆதிவாசியாகவே இருந்திருந்தால் எந்தப் பிரச்சனையுமே வந்திருக்காது என்று யாராவது யோசித்திருக்கிறீர்களா?
நிறைய நாட்களாக இதைப் பற்றி சிந்தித்ததே இல்லை (பிறந்த நாள்த் தொடக்கம் சிந்தித்ததே இல்லை). ஆனால் அண்மித்த காலங்களில் அடிக்கடி இதைப் பற்றி எல்லாம் யோசிக்கிறேன் ( காரணம் - என் கல்வியாகக் கூட இருக்கலாம்)
விஞ்ஞான உலகம் தொழினுட்ப உலகம் என்றெல்லாம் சொல்லும் பொது கோபம் கோபமாக வருகிறது ( ஏன் என்று புரிகிறதா? புரியும் புரியும், முழுமையாக வாசியுங்க)
விஞ்ஞான வளர்ச்சியால் நன்மைகள் இருப்பதால் நம்மவர்கள் அதனால் பூமிக்கு வரப் போகின்ற பாரதூரமான விளைவுகள் பற்றி சிந்திப்பதே இல்லை. (எதைப் பார்த்தாலும் நல்ல விடயங்களை எடுத்துக் கொண்டு தீய விடயங்களை விட்டு விடவும் என்று பெற்றோர் சொல்வதால் தான் எந்த விளைவுகளை யோசிக்காமல் விட்டு விட்டார்களோ. உதாரணமாக, ஒரு உண்மைச் சம்பவத்தைச் சொல்லாமே என்றால் இது எனக்கு நடந்தது தான். அம்மாவிடம் சொன்னேன் "அம்மா இங்கு படமே பாக்கிறது இல்லை அப்படிப் பார்த்தாலும் ஆங்கிலப் படம் தான் பார்ப்பது ஏன் என்றால் ஆங்கில அறிவை வளர்க்கத் தான்" என்று. அதற்கு அம்மா சொன்னவே ஒரு பதில் ஒரே அதிர்ச்சி நான் "என பிள்ளை அதில இருக்கிற நல்ல விடயங்களை எடுத்திட்டு கேட்டதை எல்லாம் விட்டிடு சரியா?" நானும் பதிலுக்கு "ஓம் அம்மா எனக்குத் தெரியாதா?" என்றுவிட்டு எதோ சொல்வது என்று "அம்மா எல்லாம் இந்தப் பாடங்களில் சகயமாக இருக்கிதே அதையும் தான் அம்மா பார்ப்பது" என்று சொல்லிவிட்டேன் (அதுக்கு அம்மா என்ன சொன்னங்க என்று நீங்களே ஊகித்துக் கொள்ளுங்க))
வாழ்க்கை என்பது வாழ்வதற்குத் தான் என்று சொல்லும் நாங்க தினம் தினம் நாம் வாழும் பூமியின் வாழ் நாளைக் கொறித்துக் கொண்டிருக்கிறோமே. எப்பவாவது சிந்தித்திருக்கிறீர்களா (சிந்தித்தவர்கள் ஏசக்கூடாது)
இந்த மாசடைதல், உயிர்களின் கொலை (மனிதன் மட்டும் இல்லீங்கோ), வேலை இல்லாமை, வறுமை அப்படி இப்படி என்று பல பிரச்சனைகள் எல்லாம் வருகிறதே எப்படி என்று பெரும்பாலானவர்கள் யோசித்ததே இல்லை. என்னைப் பொறுத்த வரை எல்லாவற்றுக்கும் காரணம் இந்த விஞ்ஞான வளர்ச்சி தான். ஆனால் ஒரு விஞ்ஞானி சொன்னார் "விஞ்ஞானத்தை வைத்து நாங்க பூமியை அளிக்காமல், அதைப் பயன்படுத்தி பூமியைப் பாதுகாக்க வேண்டும்" (விஞ்ஞானியின் பெயர் மறந்துவிட்டது. மன்னிக்கவும்). இதுவும் ஏற்றுக் கொள்ளக் கூடிய விடயம் தான்..
சிந்தியுங்கள்.... உயிரினங்களைப் பாதுகாப்பதன் மூலமாக உங்கள் சந்ததியினரைக் (மனிதன் தானே சுயநலவாதி அது தான் அவர்களின் வம்சம் என்றாலாவது சிந்திப்பானா? நம்புவோம், நம்பிக்கை தான் வாக்கை என்று சொல்கிறார்களே) காப்பாற்றுங்கள்.
11 comments:
நானும் இதை பற்றி
சிந்தித்தது உண்டு
இதை பற்றி ஒரு பதிவு போடலாம்
என்றிருக்கிறேன்
எழுதுங்க...
"விஞ்ஞானம் தேவை தானா?"
இதுவும் கூட விடைகிடைக்காத புதிர் தான்
விஞ்ஞானத்தின் வளர்ச்சி மனிதனை மிக வேகமாக சிந்திக்க வைக்கிறது
அதன் நன்மையும் தீமையும் நமக்கே.
(ஏன் அனுபவிக்கிறோம்..........)
பௌத்தமத்தின் படி புத்தர் கூறியதாக கேள்விப்படிருக்கிறேன்
விஞ்ஞான உலகம் வளர வளர மனித உலகத்தின் முடிவுகாலம் நெருங்குவதாக.
yes that's correct..
ஹாய் சிந்து சூப்பரான தலைப்பு தான் எடுத்திருக்கிங்க வாழ்த்துக்கள். ஆனால் ஒரு வேண்டுக்கோள் இன்னும் நெரைய இதைப்பற்றி எழுதலாம் சோம்பல் படாம நேரத்தை சாக்கா சொல்லாமல் இன்னும் விரிவா எழுதுங்க
அவசரம் இல்லை. ஒகேவா?
நிச்சயமாக எழுதுகிறேன் கலை அன்ன.. நேரத்தைச் சாட்டாக சொல்லவில்லைப் போதுமா?
//Sinthu said...
நிச்சயமாக எழுதுகிறேன் கலை அன்ன.. நேரத்தைச் சாட்டாக சொல்லவில்லைப் போதுமா?//
போதும் .ஓகே ஓகே நன்றி எழுதுங்க வாழ்த்துக்கள்
சந்துரு அண்ணா, வரும் ஆனா வராது..
நான் எழுதியத்தட்குக் கருத்துச் சொல்லவில்லையே..?
நல்ல பதிவு சிந்து.
தொடர்ந்து எழுத வாழ்த்துக்கள்.
நன்றி..
சிந்து தமிழ் எழுத முதல படிச்சிட்டு வந்து எழுதறது நல்லது. தயவு செய்து தமிழை கொச்சைப் படுத்த வேண்டாம். சொல்ல வந்த விஷயம் கடுமையானது ஆனால் கடைசியில் கண்ணை மூடி
Post a Comment