ஏன் சந்தித்தாள் உன்னை
தானாகவே
வாழவிரும்பியவளை
நீயாக மாற்றியதால்
தன்னை இழந்தவளாய்....
எதையுமே சாதிக்கத்
தெரியாதவளாயிருந்தவள்
உன்னைக் கண்டதும்
எப்படி
சாதிக்கத் தொடங்கினாள்
தன்னாலேயே
கட்டுப்படுத்த முடியாத
அவள் கோபம்
எங்கு போனது
உன்னைக் கண்டதும்
உன்னுள்ளே உறங்தவளாக
உன் எண்ணங்களுக்குக்
கட்டுப்பட்டவளாக....
10 comments:
அன்பின் அடக்குமுறையும்
காதலின் கட்டுப்பாடும்
ஒன்று பட்டதால்
ஒடுங்கிப் போனாளோ அவள்.!
காதல் கவிதையா...!
ம்.. நடக்கட்டும் நடக்கட்டும்
//ஏன் சந்தித்தாள் உன்னை
தானாகவே வாழவிரும்பியவளை நீயாக மாற்றியதால் தன்னை இழந்தவளாய்....
எதையுமே சாதிக்கத் தெரியாதவளாயிருந்தவள் உன்னைக் கண்டதும் எப்படி சாதிக்கத் தொடங்கினாள் தன்னாலேயே கட்டுப்படுத்த முடியாத அவள் கோபம் எங்கு போனது உன்னைக் கண்டதும் உன்னுள்ளே உறங்தவளாகஉன் எண்ணங்களுக்குக் கட்டுப்பட்டவளாக....//
இதெல்லாம் நீங்களா சிந்து?
ஹி ஹி ஹி..
"
கவின் said...
காதல் கவிதையா...!
ம்.. நடக்கட்டும் நடக்கட்டும்"
காதல் கவிதைகள் எழுதிடும் நேரம்....
"கலை - இராகலை said...
//ஏன் சந்தித்தாள் உன்னை
தானாகவே வாழவிரும்பியவளை நீயாக மாற்றியதால் தன்னை இழந்தவளாய்....
எதையுமே சாதிக்கத் தெரியாதவளாயிருந்தவள் உன்னைக் கண்டதும் எப்படி சாதிக்கத் தொடங்கினாள் தன்னாலேயே கட்டுப்படுத்த முடியாத அவள் கோபம் எங்கு போனது உன்னைக் கண்டதும் உன்னுள்ளே உறங்தவளாகஉன் எண்ணங்களுக்குக் கட்டுப்பட்டவளாக....//
இதெல்லாம் நீங்களா சிந்து?
ஹி ஹி ஹி.."
இந்த சிரிப்பின் அர்த்தம் என்னவோ?
நான் அவல் அல்ல கலை அண்ணா..
"
SASee said...
அன்பின் அடக்குமுறையும்
காதலின் கட்டுப்பாடும்
ஒன்று பட்டதால்
ஒடுங்கிப் போனாளோ அவள்.!"
எனக்குத் தெரியாது அவளைத் தான் கேட்க வேண்டும்..
//இந்த சிரிப்பின் அர்த்தம் என்னவோ? //
ஒரு அர்த்தமும் இல்லை. நானும் அவன் இல்லை, ஓகேவா?
எதையுமே சாதிக்கத்
தெரியாதவளாயிருந்தவள்
உன்னைக் கண்டதும்
எப்படி
சாதிக்கத் தொடங்கினாள்
காதலுக்கு மட்டும் இந்த வலிமையை
யார் கொடுத்தது
கவிதை அருமை சிந்து .
//நான் அவல் அல்ல கலை அண்ணா..//
இது எழுத்துப்பிழையா இல்ல தெரிந்தே செய்ததா சிந்து..
சொல்லுங்க பிறகு ஏன் கேட்டனான் எண்டு சொல்றன்..
தெரிந்தும் தெரியாமலும் எழுதியது என்றால் நம்பவா போறீங்க.. சொல்லுங்க..
அகிலன் அண்ணா..
அறியாமல் இல்லை, கவலையீனத்தல் வந்த தவறு..
Post a Comment