மாணவர்கள் எல்லோரும் உயர் தரத்தில் கலைத் துறையை படிப்பதிலும் விஞ்ஞான கணிதத் துறைகளில் ஆர்வம் காட்டுவது வழக்கம் தான (அதுவும் அதைத் தொடர முடியாமல் மாறிப் படிப்பவர்களும் உண்டு, அதேன்றாலும் பரவாயில்லை, சிலர் இல்லை நான் படிப்பேன் என்று படித்துக் கவிளுபவர்களும் உண்டு - நான் அப்படித் தான் - யாழ் பல்கைலைக் கழகத்துக்கு கிடைத்தாலும் கவிழ்ந்தேன் என்பது உண்மை தான்.) ஆமா என் இதை இப்ப சொல்றேன்..? ஆ ஆ இப்படி உயிரியல் என்று படித்தாலும் அதை வெட்டிக் கொத்தி பார்க்கிறதோட சரி, அப்படி இப்படி என்று கணிதத்துக்கு வந்தா தரவுகள் அது இது தான். உந்த உயிரினங்கள் எப்படி வாழ்கின்றன அதை எப்படிப் பாதுகாப்பது என்பதை பற்றி யோசிப்பதே கிடையாது ( ஸ்ரீ லங்காவில் நான் படித்த வரை நான் கேள்விப்பட்டதே இல்லை)
ஆனால் சூழலில் நான் வாழ்கிறோம் என்பதிலிருந்து நான் அறிந்து கொள்ள வேண்டியவை அதிகம். காரணம் ஒரு உயிரினம் இல்லை என்றால் அதில் தங்கி இருக்கின்ற மற்றைய உயிரினங்களும் பாதிக்கப்படும் என்பது மனிதர்களுக்கு மட்டுமல்ல பிற உயிரினங்களுக்கும் தான். உணவுச் சங்கிலி என்பதைப் படித்தால் மட்டும் போதாது அதன் உள்ளார்ந்த கருத்தையும் அறிய வேண்டும் என்பது எல்லோருக்கும் தெரியவேண்டும். எதோ படிச்சமா புள்ளியை வாங்கினமா என்பது வாழ்க்கை இல்லை. படித்ததை எங்கள் மற்றும் உங்கள் வாழ்க்கையுடன் ஒப்பிட்டுப் பார்க்க வேண்டும்.
மனிதனின் வளர்ச்சியாலும் மனிதனால் வளர்க்கப்படும் விஞ்ஞானத்தாலும் தான் இந்தப் பிரச்சனையே..
மனிதனால் உயிரினங்கள் நேரடியாக அழிக்கப்படுவது மட்டுமல்லாமல் மறைமுகமாகவும் அழிக்கப்படுகின்றன. காடழிப்பு, CO2 வாயுவுன் வெளியேற்றம் என்பது மனிதனின் வாழ்க்கையை எவ்வாறு பாதிக்கிறது என்பதை பொதுவாக யாருமே சிந்திப்பதில்லை. (இப்ப தாங்க விடயத்துக்கே வாறன்..)
அடடா இது என்ன இப்படி வெக்கையா இருக்கே ஐயயோ அந்த விசிறி (இது கை விசிறி இல்லீங்க, மின் விசிறி அது தான் fan) அப்புறம் AC ஐப் போடுங்க என்றெல்லாம் சொல்லுவாங்க, ஆனால் அதன் காரணத்தைக் கேட்டால் தெரியாது. பூமி வர வர வெப்பமடைந்துகொண்டு போகிறது ஆனால் நாங்க தான் சிந்தித்தபாட்டைக் காணவில்லை. பூவி வெப்பமடையும் ஒவ்வொரு கணமும் பனி உருகிய வண்ணமே இருக்கும் அதுவும் விஞ்ஞானிகள் எதிர்பார்ப்பதை விட அதிக மடங்குகளால். அதனால் பல உரியினங்கள் அளிக்கப் பட்டுக்கொண்டிருப்பது கசப்பான, பலர் அறியாத உண்மை.
ஒவ்வொரு வருடமும் கிட்டத்தட்ட 50, 000 - 55, 000 உயிரின வகைகள் அழிவதற்கான சாத்தியக்கூறுகள் இருக்கின்றன ஏன் அழிகின்றன என்றே சொல்லலாம்...
இவை எம்மால் சிந்திக்க முடியாதவை தான ஆனால் அவை தான் நடந்துகொண்டிருக்கின்றன.
20 comments:
"மாணவர்கள் எல்லோரும் உயர் தரத்தில் கலைத் துறையை படிப்பதிலும் விஞ்ஞான கணிதத் துறைகளில் ஆர்வம் காட்டுவாது வழக்கம் தான (அதுவும் அதைத் தொடர முடியாமல் மாறிப் படிப்பவர்களும் உண்டு,"
என்னுடைய துறையான வார்த்தக துறையா தவற விட்ட உன்னை வன்மையாக கண்டிக்கிறேன் lol............
"நான் அப்படித் தான் - யாழ் பல்கைலைக் கழகத்துக்கு கிடைத்தாலும் கவிண்டடு என்பது உண்மை தான்"
சிந்து எழுத்துப் பிழை கலை சரி செய்யவும் வாசிப்பதற்கு கஷ்டமகா இருக்கின்றது மற்றும் கருத்தையும் மாற்றுகின்றது
நல்ல பதிவு இதை சொல்ல எனக்கு தகுதியல்லை என்பது உண்மையே என் வழக்கத்தை மற்ற முயழ்ச்சிக்கிறேன்
நன்றி
கொஞ்சம் கூட சிந்திக்காத மண்டைகள கொஞ்சம் சிந்திங்கடானு சொல்றீங்க.......
நல்லவிடயம் தான் சிலவற்றை சிந்திக்கவேண்டம். ஆனா முடியல
ஆனாலும் சிந்தித்து பார்க்கையில அது ரொம்ப தூரத்தில இருக்கு.
ஆனாலும் சிந்திக்கனும்
ஏனா எதிர்கால சந்ததிகள் வாழனுமே................
SO தகவலுக்கு நன்றி சிந்து.
(சரி நீங்க யாழில் இருந்து எப்ப Bangladesh போனீங்க..?)
துஷா அக்கா
நீங்களும் விங்காந்த்துரையைத் தானே படிக்க இருந்தீர்களாம் என்று ஒரு கேள்வி?
பிழைகளைத் திருத்துஇக் கொள்கிறேன், அவசரமாகப் பதிவிட்டதால் தான்.
வருகைக்கு நன்றி சசீ அண்ணா..
அக்கா முடிந்த அளவுக்கு மாற்றி இருக்கிறேன்..
கழுத்து அறுபட்டு
துடிதுடித்துச் சாகும்
கறிக்கோழியைக் காணும்போதும்...
தோலுரித்து தலைகீழாய்
இரத்தம் சொட்ட
தொங்கிக்கொண்டிருக்கும்
ஆட்டுக்கறியைக் காணும்போதும்...
பாவப்படாத மனசு
சாலையின் நடுவில்
அடிபட்டு கிடக்கும்
தெருநாயொன்றை
கண்டபோது பரிதவித்து
எனக்குள் ஒரு கேள்வியினை
வீசிப்போனது....
நாம்
உயிருக்காக இரங்குகிறோமா,
உயிரின் வடிவத்திற்காக
இரங்குகிறோமா?
இது எனது நண்பர் நிலாரசிகனின்
கவிதை வரிகள்
இந்த பதிவுக்கு ஏற்றதாக இருக்கிறது அல்லவா
//Thusha said...
"மாணவர்கள் எல்லோரும் உயர் தரத்தில் கலைத் துறையை படிப்பதிலும் விஞ்ஞான கணிதத் துறைகளில் ஆர்வம் காட்டுவாது வழக்கம் தான (அதுவும் அதைத் தொடர முடியாமல் மாறிப் படிப்பவர்களும் உண்டு,"
என்னுடைய துறையான வார்த்தக துறையா தவற விட்ட உன்னை வன்மையாக கண்டிக்கிறேன் lol.....///
நானும் வன்மையாக கண்டிக்கிறேன்.
Thusha said...
//சிந்து எழுத்துப் பிழை கலை சரி செய்யவும் வாசிப்பதற்கு கஷ்டமகா இருக்கின்றது மற்றும் கருத்தையும் மாற்றுகின்றது//
இந்த பந்தியிலும் இருக்கு. lol..
நிலாவன் சூப்பரா ஒரு கவிதைய தந்தமைக்கு நன்றி.
ம்ம்ம்ம் சிந்திக்கனும்........சிந்து
Highlights
//எதோ படிச்சமா புள்ளியை வாங்கினமா என்பது வாழ்க்கை இல்லை. படித்ததை எங்கள் மற்றும் உங்கள் வாழ்க்கையுடன் ஒப்பிட்டுப் பார்க்க வேண்டும்.//
உங்கள் கவிதையின் தரம் நிரந்தரம் ( அப்துல் கமீத் அவர்கள் எனதோ ஒரு விளம்பரத்தில் இப்படி தான் solvaar)
அதில் பலர் என்று போடாதது என் தவறு தான் மன்னிக்கவும்..
கலை அண்ணா, இப்ப ok வா ..?
How are you Sinthu!
I'm good Theva anna, How are you?
சிந்து, இங்கு அது சம்பந்தமான விடயங்கள் படிக்கும் போது தான் அதை பற்றி சிந்திக்க தோன்றுகிறது இல்லையா?
படிப்பதைப் பிரயோகிக்க வேண்டும். எங்களுக்குத் தெரிந்ததைப் பிறருக்குச் சொல்ல வேண்டும். நாங்கள் இவ்வளவு நாளாகத் தெரிந்தும் தெரியாமல் இருந்த மாதிரி மற்றவர்கள் இருக்கக் கூடாது பாருங்கோ அது தான்.
"
SASee said...
கொஞ்சம் கூட சிந்திக்காத மண்டைகள கொஞ்சம் சிந்திங்கடானு சொல்றீங்க.......
நல்லவிடயம் தான் சிலவற்றை சிந்திக்கவேண்டம். ஆனா முடியல
ஆனாலும் சிந்தித்து பார்க்கையில அது ரொம்ப தூரத்தில இருக்கு.
ஆனாலும் சிந்திக்கனும்
ஏனா எதிர்கால சந்ததிகள் வாழனுமே................
SO தகவலுக்கு நன்றி சிந்து.
(சரி நீங்க யாழில் இருந்து எப்ப Bangladesh போனீங்க..?)"
நான் பங்களாதேஷ் march 29 க்கு வந்து உடன் ஒரு வருடம் ஆகின்றது ஆனால் யாழிலிருந்து february 13 அன்று புறப்பட்டேன். தாமதத்திற்கு மன்னிக்கவும்.
நல்ல பதிவு
//அதுவும் அதைத் தொடர முடியாமல் மாறிப் படிப்பவர்களும் உண்டு//
கணித, விஞ்ஞானத் துறைகளின் மாயையில் வீழ்ந்தவர்கள். அதனால் வீணானது காலமும்தான்.
"லதானந்த் said...
நல்ல பதிவு"
நன்றி
"Subankan said...
//அதுவும் அதைத் தொடர முடியாமல் மாறிப் படிப்பவர்களும் உண்டு//
கணித, விஞ்ஞானத் துறைகளின் மாயையில் வீழ்ந்தவர்கள். அதனால் வீணானது காலமும்தான்."
உண்மை தான். எண்ணப் போல் சிலர் அப்படித் தான். அதற்காக நான் கஷ்டப்பட்டு எல்லாம் படிக்கவில்லை. School and tuition படிப்பு மட்டுமே.
Post a Comment