Monday, March 23, 2009

காதலர்கள்...

என்ன பதியலாம்..............................

என்ன பதியலாம் என்று நினைத்த போது எந்த விடயமுமே மனதில் எட்டவில்லை, எனவே வழமை போல என் வீட்டு வேலையைச் செய்யத் தொடங்கிய போது தான் என் அறைத் தோழிக்குத் தொலைபேசி அழைப்பு வந்தது. அப்போது தான் என் நீண்ட நாள் சந்தேகம் நினைவுக்கு வந்தது. எனக்கு வந்த சந்தேகத்தை உங்கள் முன்னிலையில் வைத்து உங்கள் கருத்துக்களையும் அறியலாம் என்ற நோக்கத்தில் எழுதும் பதிவு தான் இது.

என் பங்களாதேசத்து வாழ்க்கையிலிருந்து அறிந்த / பெற்ற அனுபவம் தான் இது என்று சொல்லலாம். (என் சொந்த அனுபவம் தான் ஆனால் இந்த சம்பவம் எனக்குத் தான் என்று கருதுவது தப்பு)

என்ன சும்மா அலட்டுகிறேனோ? வாங்க விசயத்துக்குப் போகலாம்..

முதலாவது கேள்வி இது தான்...

காதலிப்பவர்கள் தொலைபேசியில் பேசும் போதோ அல்லது இணையத்தில் கதைக்கும் போதோ மெல்லமாகப் பேசுவது ஏன்? அவர்கள் என்ன கதைக்கிறார்கள் என்று நான் ஒட்டுக் கேட்பதும் இல்லை அப்படிக் கேட்டாலும் எனக்கு விளங்கப் போவது இல்லை, காரணம் அவர்கள் பேசுவது அவர்களுக்கே விளங்குகிறதா என்பது மட்டுமல்ல, பலர் பிற மொழிகளில் பேசுவார்கள் ( சிங்களம், பங்களா அல்லது பங்காளி, கமாய், நேபாளி, உருது).

மற்றவர்களுடன் பேசும் போதே மெதுவாகப் பேசும் அவர்கள் தங்கள் காதலர்களுடன் பேசும் போது என்றால் கேட்கவா வேண்டும். அவர்கள் பேசுகிறார்களா என்ற சந்தேகம் பலமுறை எனக்கு மட்டுமல்ல என் நண்பிகளுக்கும் தான்.

இதன் காரணம் என்ன, (மற்றவர்கள் கேட்டுவிடுவார்கள் என்றோ)?

காதலித்தால் அந்த இயல்பு தானாகவே வந்துவிடுமா? அப்படி மெல்லமாகக் கதைக்க வேண்டும் என்றால் காதலிக்கத் தான் வேண்டுமா? (இந்தக் கேள்வி கேட்பதற்குக் காரணம், நான் பொதுவாக சத்தமாகத் தான் கதைப்பேன் - மெதுவாகப் பேச நினைத்த போதும் முடிவதில்லை - உதவிலக் வரவேற்கப்படுகின்றன)

காதலிக்கும் பெண்கள் மட்டுமா இல்லை ஆண்களும் மெல்லமாகத் தான் பேசுவார்களா? உங்களுக்குத் தான் இந்தக் கேள்வி? பதில் சொல்வது உங்கள் கையில்த் தான் இருக்கிறது.....

21 comments:

கல்வி அபிவிருத்தி ஒன்றியம் said...

ஆஹா சிந்து ...... இது கடும் ஆராட்சிதான் எதுவும் வேணாம் லவ் பண்ணி பார்த்தால் போட்சி. சும்மா சொன்னன் சிந்து அப்புறம் லவ் பண்ணிட்டு என்ன திட்டாதிங்க. எனக்கும் நிறையவே சந்தேகம் இருக்கிறது........

இப்ப விசயத்துக்கு வாறன்...... நான் நினைக்கிறன் இப்படயும் இருக்குமோ...
1. அவங்க கதைப்பத மற்றவங்க கேட்கக்குடது தனது காதலனோ காதலியத்தவிர
2. எப்ப அதிகமான காதலர்கள் பேசுவது வேற விசயமுங்க சிந்து உங்களுக்கு வயசு போது சொல்லமாட்டன். அத மற்றவங்க கேட்ட அவ்வளவு தானுங்கோ .........
3. தனது காதலனோ காதலியோ தனக்கு அருகில் இருந்து பேசுவது போன்ற ஒரு பிரமை
4. தான் கதைப்பது தனது காதலியையோ, காதலனையோ தவிர வேறு எவரது காதுகளில் பட குடாது என்பதற்காக
சிந்து இன்னும் நிறைய இருக்கு.... ஆனா அனுபவமோ என்று கேட்காதிங்க சிந்து........

தமிழ் மதுரம் said...

காதலித்தால் அந்த இயல்பு தானாகவே வந்துவிடுமா? அப்படி மெல்லமாகக் கதைக்க வேண்டும் என்றால் காதலிக்கத் தான் வேண்டுமா? (இந்தக் கேள்வி கேட்பதற்குக் காரணம், நான் பொதுவாக சத்தமாகத் தான் கதைப்பேன் - மெதுவாகப் பேச நினைத்த போதும் முடிவதில்லை - உதவிலக் வரவேற்கப்படுகின்றன)//



ம்...அந்த இயல்பு உங்களை அறியாமல் தானகவே வந்து விடும்...

இதிலை என்ன ஆராய்ச்சி வேண்டிக் கிடக்கு??

தமிழ் மதுரம் said...

காதலிக்கும் பெண்கள் மட்டுமா இல்லை ஆண்களும் மெல்லமாகத் தான் பேசுவார்களா? உங்களுக்குத் தான் இந்தக் கேள்வி? பதில் சொல்வது உங்கள் கையில்த் தான் இருக்கிறது.....//



யோ நல்லாத்தான் யோசிக்கிறீங்கள்??? ஆண்களும் மெதுவாகத் தான் பேசுவார்கள்...

மனோ said...

//காதலித்தால் அந்த இயல்பு தானாகவே வந்துவிடுமா? //

உண்மை தான். ஆனால் எனக்கு காதல் அனுபவம் இல்லை.

//காதலிக்கும் பெண்கள் மட்டுமா இல்லை ஆண்களும் மெல்லமாகத் தான் பேசுவார்களா? உங்களுக்குத் தான் இந்தக் கேள்வி? பதில் சொல்வது உங்கள் கையில்த் தான் இருக்கிறது.....//

இருவருமே மெல்லமாகத் தான் பேசுவார்கள்.

கல்வி அபிவிருத்தி ஒன்றியம் said...

"அறைத் தோழிக்குத் தொலைபேசி அழைப்பு வந்தது.........." நம்பித்தமிள்ள....

என்ன சிந்து எதுக்கெல்லாம் பொய் ஆராட்சி. லவ் பண்ணி பார்த்தா போட்சிது..... நான் சும்மா சொன்னான் சிந்து நான் சொன்னேன் என்று லவ் பண்ணிற்று என்னை திடடிரத்தின்க...

ஒகே நான் நினைக்கிறான்...........
1. தான் கதைப்பது தன் காதலியை அல்லது காதலனை தவிர வேறு எவருக்கும் கேட்கக்குடது என்று...
2. தன் காதலன் அல்லது காதலி அருகில் இருப்பதாக ஒரு பிரமை...
3. தான் கதைப்பது மற்றவங்களுக்கு விளங்கினால் பிரட்சனை இப்ப அதிகமான காதலர்கள் பேசுறது................. நான் சொல்லல்ல சிந்து உங்களுக்கு வயசு போதாது என்றதால.......
4. தன் காதலி அல்லது காதலனின் காதுகளில் சத்தமாக கதைத்து காது வலி ஏற்படக்குடது என்ற எண்ணம் இது ஓவரா இருக்கோ

என்ன சிந்து என்னும் வேணுமோ........ ஆனா அனுபவமோ என்று மட்டும் கேட்டிடாதிங்க இப்பதான் நான் .............

கல்வி அபிவிருத்தி ஒன்றியம் said...

"அறைத் தோழிக்குத் தொலைபேசி அழைப்பு வந்தது.........." நம்பித்தமிள்ள....

என்ன சிந்து எதுக்கெல்லாம் பொய் ஆராட்சி. லவ் பண்ணி பார்த்தா போட்சிது..... நான் சும்மா சொன்னான் சிந்து நான் சொன்னேன் என்று லவ் பண்ணிற்று என்னை திடடிரத்தின்க...

ஒகே நான் நினைக்கிறான்...........
1. தான் கதைப்பது தன் காதலியை அல்லது காதலனை தவிர வேறு எவருக்கும் கேட்கக்குடது என்று...
2. தன் காதலன் அல்லது காதலி அருகில் இருப்பதாக ஒரு பிரமை...
3. தான் கதைப்பது மற்றவங்களுக்கு விளங்கினால் பிரட்சனை இப்ப அதிகமான காதலர்கள் பேசுறது................. நான் சொல்லல்ல சிந்து உங்களுக்கு வயசு போதாது என்றதால.......
4. தன் காதலி அல்லது காதலனின் காதுகளில் சத்தமாக கதைத்து காது வலி ஏற்படக்குடது என்ற எண்ணம் இது ஓவரா இருக்கோ

என்ன சிந்து என்னும் வேணுமோ........ ஆனா அனுபவமோ என்று மட்டும் கேட்டிடாதிங்க இப்பதான் நான் .............

Anonymous said...

சிந்து, நானும் இதை அவதானித்ததுண்டு. ஆனால், எனக்கும் விடை தெரியாது. எனது கருத்தின் படி, ஆண்கள் அப்படி இல்லை என்று நினைகிறேன்......

Sinthu said...

இருக்கிற பிரச்சனையையே பாக்கிறதுக்கு வழி இல்லையாம் லவ் பண்ணி அந்தப் பிரச்சனை வேற எனக்குத் தவியா? சந்ரு அண்ணா..

அனுபவம் இல்லை அது தான் இந்த சந்தேகம்....கமல் அண்ணா..

யோசிக்கவில்லை கண்ணால் கண்ட உண்மைகளைக் கேட்டேன்.. தப்பா?

மனோ அண்ணா.. அனுபவம் இல்லை எண்டா எப்படி இப்படி சொல்றீங்க?

அனுபமோ என்று கேட்கவில்லை... அனுபவம் உண்டா என்று கேட்கிறேனே?

Sinthu said...

தப்ப எடுத்திடாதீங்க சந்ரு அண்ணா...
(எல்லாம் ஓர் safety க்குத் தான்...

Sinthu said...

ஆண்களும் அப்படித் தானாம் கீதா... ஆண்களே சொல்றாங்க ஒத்துக்கத்ட் ஹான் வேண்டும்..

kuma36 said...

காதலுக்கு கண் இல்லை என்பார்கள் ஆனால் காது நல்லா கேட்கும் போல.
ஹி ஹி ஹி..

இதுல என்ன சந்தோகம் நேரம் காலம் வரும் போது எல்லாம் புரியும். அதற்காக கண்ணில் பாக்கிறதுல எல்லாம் சந்தோகம் அதான் பதிவு போட்டேன் தப்பானு கேட்க கூடாதம்மா. நான் காதலிச்ச போது போன் இருக்கல அதனால சரியா சொல்ல தெரியல.

Sinthu said...

அந்த நேரம் காலம் எப்ப வரும்? அப்படியா தொலை பேசி இருக்கல்லையா?.. அது தான் இப்ப இர்க்கே அப்ப சொல்லுங்களேன்.

SASee said...

என் கருத்துரை உங்கள் பார்வையில் எப்படியிருக்கும் என்பது எனக்குத் தெரியாது..?
நீங்கள் இந்த பதிவை தந்ததன் காரணம் என்ன என்பதும் எனக்கு தெரியாது,
கருத்துரை தராமலே இருப்போம் என்று நினைத்தேன். ஆனாலும் தரச்சொல்கிறது என் கணினி, பிறரது கருத்துரையை கண்டு.

கதலின் இயல்புகளில் ஒன்று மௌனம்,
அது கதைக்க ஆரம்பித்தால் எப்படியிருக்கும். அந்த மொழி சத்தமாய் சொன்னாலும் புரியாது.
அப்ப ஏன் சத்தமாய் சொல்ல வேண்டும்.....
மற்றப்படி காதலர்களின் அன்பு கலந்த பயம்...
அந்தப் பயம் தேவைதானா..? உண்மையில் காதல் என்றால் தேவை. இதல்லாம் காதலிப்பவர்களிடம் மட்டும்

ஆனால்......

நீங்கள் பார்த்த அந்த சத்தமற்ற உரையாடல் சில வேளை கேட்க சகிக்காத ஒன்றாகவும் இருக்கலாம்.
அதை பிறர் கேட்டால் அதன் அசிங்கம்
வெளிப்படும் என்ற பயம்.
முன்பொரு முறை உங்களின் பதிவிற்கு
நான் தந்த கருத்துரை ஞாபகம் இருக்கிறதா..?

மனிதக்காதல்
மரத்துப் போய்
சப்பிப் போட்டசக்கையாய்
நொந்து போய்கிடக்கிறது.!

இன்று இருக்கும் அதிகமானவை காதல் அல்ல அது காமத்தின் சுயநல நிசப்தம்.

நீங்கள் பார்த்தது ஒரு வேளை முதல் வகையாகவும் இருக்கலாம்.

kuma36 said...

///Sinthu said...
அந்த நேரம் காலம் எப்ப வரும்? அப்படியா தொலை பேசி இருக்கல்லையா?.. அது தான் இப்ப இர்க்கே அப்ப சொல்லுங்களேன்.///

எப்ப வேண்டுமானாலும் வரலாம்.
இப்ப தொலைபேசி இருக்குதான் ஆனால்...??

Sinthu said...

எனக்குத் தெரியாது நீங்கள் சொல்வது சரியாகவும் இருக்கலாம் சசீ அண்ணா.. ஆனால் காதல் என்ற பெயரில் காமம் செய்பவர்களை நானும் பார்த்திருக்குறேன்.

சொன்ன வசனத்தைச் சொல்லி முடியுங்களேன் கலை அண்ணா..

Anonymous said...

(என் சொந்த அனுபவம் தான் ஆனால் இந்த சம்பவம் எனக்குத் தான் என்று கருதுவது தப்பு)
////////
இதை நாங்க நம்பனுமாக்கும்

Anonymous said...

என்ன சும்மா அலட்டுகிறேனோ?
//////////////
சந்தேகமா இருக்கா...!

Anonymous said...

காதலித்தால் அந்த இயல்பு தானாகவே வந்துவிடுமா?
*******************
காதலிச்சு பாருங்க...!
*********************
அப்படி மெல்லமாகக் கதைக்க வேண்டும் என்றால் காதலிக்கத் தான் வேண்டுமா?
*********************
இதற்கும் அதே பதில் தான்
***********************
(இந்தக் கேள்வி கேட்பதற்குக் காரணம், நான் பொதுவாக சத்தமாகத் தான் கதைப்பேன் -
**************************
உண்மையாவா???
*********************
மெதுவாகப் பேச நினைத்த போதும் முடிவதில்லை - உதவிலக் வரவேற்கப்படுகின்றன)

************************
அப்ப பேசமல் இருங்க சத்தமே வராது...!

Anonymous said...

கமல் said...
காதலித்தால் அந்த இயல்பு தானாகவே வந்துவிடுமா? அப்படி மெல்லமாகக் கதைக்க வேண்டும் என்றால் காதலிக்கத் தான் வேண்டுமா? (இந்தக் கேள்வி கேட்பதற்குக் காரணம், நான் பொதுவாக சத்தமாகத் தான் கதைப்பேன் - மெதுவாகப் பேச நினைத்த போதும் முடிவதில்லை - உதவிலக் வரவேற்கப்படுகின்றன)//



ம்...அந்த இயல்பு உங்களை அறியாமல் தானகவே வந்து விடும்...

இதிலை என்ன ஆராய்ச்சி வேண்டிக் கிடக்கு??
************************
அனுபஸ்தர் சொல்றார் கேட்டிக்குங்க...!

Anonymous said...

கீர்த்தனா said...
சிந்து, நானும் இதை அவதானித்ததுண்டு. ஆனால், எனக்கும் விடை தெரியாது. எனது கருத்தின் படி, ஆண்கள் அப்படி இல்லை என்று நினைகிறேன்......
************************
ஒஹோ அப்படியா????

Anonymous said...

ஆனாலும்....! மிகவும் முக்கியமான ஆராட்சிதான் இது! தொடருங்கள்....!