Sunday, March 15, 2009

பூமி வெப்பமடைதல்

நான் இப்போது இருக்கும் நாடு என்ற வகையில் பங்களாதேசத்தைப் பற்றிய ஒரு திடிக்கிடும் செய்தி பங்களாதேசம் என்பது இன்னும் கொஞ்சக் காலத்துக்குத் தான் என்பதும் உண்மை. அதாவது கடலுடன் மூழ்குவதற்கான சாத்தியக்கூறு இருக்கிறது, ஏன் எனில் பூமி வெப்பமடைந்து வருவதால் பனிக்கட்டி உருகி நாட்டின் நிலப் பரப்பைக் குறைக்கிறது. தாழ் பிரதேசம் என்பதும் ஒரு காரணமாக இருக்கலாம். பல மேற்கத்தேய நாடுகளின் CO2 வெளியீட்டால் அதிகளவு பாதிக்கப்படும் நாடுகளில் இந்த நாடும் ஒன்று.


அடிக்கடி வெள்ளப் பெருக்கால் பாதிக்கப்படும் நாடு எது என்று கேட்டீங்க என்றால் எல்லோரும் சொல்லுவாங்க ( நான் இங்கே வரும் போதும், பங்களாதேசமா அது தான் வெள்ளம் வர்ற நாடு ஆச்சே.. எதுக்கு போறீங்க என்றார்கள் பங்களாதேசம் எங்கிருக்கிறது என்று தெரியாத மனிதர்கள் கூட. இதில் இருந்து என்ன தெரிகிறது. பெயரை வைத்தே பொது அறிவை வளர்த்திருக்கிரார்களோ?)

மேலை நாட்டவர்களின் CO2 வெளிப்பாட்டால் அவர்களது நாட்டவர்கள் மட்டும் பாதிக்கப் படப் போவதில்லை. காரணம், அவை வளியுடன் கலக்கும் போது தனியாக இந்த நாட்டவர்கள் தான் என்னை வெளியிட்டவர்கள் அதனால் நான் அவர்களின் நாட்டுக்கு மேலத் தான் இருப்பேன் என்று நிற்பதில்லை. Ahmed என்பவர் சொன்னார், மேலை நாடுகள் பூமி வெப்பமடைவதால் தங்கள் நடவடிக்கைகளை மாற்றிக் கொள்கின்றங்க. ஆனால் பங்களாதேசத்தைப் பொறுத்த வரை இந்நாட்டு மக்கள் தங்கள் வாழ்க்கையையே தொலைக்கின்றனர். அது மட்டும் அல்லாது பூமி வெப்பமடைதலுக்கு எந்தவிதக் காரணமாகவும் இல்லாத நான் மக்கள் ஏன் பாதிக்கப் பட வேண்டும் என்ற கேள்வியையும் எழுப்பினார்? (யாராவது பதில் வைத்திருந்தால் சொல்லலாம்)

இது ஆரம்பம் தான் இன்னும் வரும் இந்த நாட்டைப் பற்றியும் பூமியைப் பற்றியும்..

11 comments:

SASee said...

சரியான விடை என்னால் தரமுடியுமா எனத் தெரியாது. இருப்பினும் என்னுள் பட்டது....

ஒரு நாடு உலகப்படத்திலிருந்து
காணாமல் போவதென்பது உலகமக்கள் அனைவருமே (மனிதர்கள் என்ற வகையில்) சிந்திக்க வேண்டிய விடயம் தான்.......
அதே நேரம் அனேகமான மேலைத்தேய நாடுகளை, நாட்டவர்களைப் பொறுத்தவரை (இதில் ஒரு சில நாடுகள் விதிவிலக்காகலாம்) அவர்கள் எந்த நாட்டை, மக்களை பற்றியும் உண்மையாகவே கவலை கொள்கின்றனரா என்றால் கேள்விக் குறிதான். அப்படியும் எதாவது ஒரு நாட்டைப் பற்றி கவலைப்படுவர் என்றால் குறித்த நாட்டினால் அவர்களுக்கு எதேனும் ஆகவேண்டியதிருப்பதாய் அர்த்தம்.
ஆக.....
நமக்கு நாமே....!!!
வெள்ளம் வரும் முன் அணைக்கட்ட வேண்டியது அவசியமே......!!!

கமல் said...

ஆஹா...இப்பிடியும் நிறைய விசயங்கள் இருக்கா??

Sinthu said...

நன்றி சசீ அண்ணா..
அது தான் நடந்து கொண்டிருக்கிறது. கமல் அண்ணா..காரண கர்த்தாக்கள் பலர்.

வதீஸ்வருணன் said...

hi Sinthu
Good Article
Keep it up....

கீர்த்தனா said...

சிந்து, நன்று.
இன்னும் கொஞ்சம் விரிவாக எழுதி இருக்கலாமே.....
தொடர்ந்து எழுத வாழ்த்துக்கள்.....

சந்ரு said...

நன்றி சிந்து கட்டாயம் பேசப்பட வேண்டிய விடயத்தை பேசுறிங்க எல்லோரும் சிந்திக்க வேண்டிய விடயம்தான்..... அந்த நேரம் நீங்க எங்க போறதா நினைத்து இருகிங்க...

Sinthu said...

thanks Vathees anna...

I'll write Keetha, Also, you can write about it.

Chanru anna, This moment is true, so I don't worry about that.

Subankan said...

//கீர்த்தனா said...

சிந்து, நன்று.
இன்னும் கொஞ்சம் விரிவாக எழுதி இருக்கலாமே.....
தொடர்ந்து எழுத வாழ்த்துக்கள்.....//


வழிமொழிகிறேன். ஏதோ நிறைவில்லாத்துபோல உணர்கிறேன். தவறாக இருந்தால் மன்னிக்க‍வும்.

நிலாவன் said...

ஏற்கனவே வளர்ந்து விட்ட விஞ்ஞானம்
மனிதர்களுடைய அதிகப்படியான தேவைகள்
இவை தான் பூமி வெப்பமடைய காரணம். பூமி வெப்பமடைவதை தடுப்பதற்கான வழிகளை இப்போதிருந்தே
கடைபிடித்தாலும் சாத்தியமா என்று சந்தேகம் .

பிரபா said...

கவனம் சிந்து .பார்த்து ....

Sinthu said...

"
Subankan said...
//கீர்த்தனா said...

சிந்து, நன்று.
இன்னும் கொஞ்சம் விரிவாக எழுதி இருக்கலாமே.....
தொடர்ந்து எழுத வாழ்த்துக்கள்.....//


வழிமொழிகிறேன். ஏதோ நிறைவில்லாத்துபோல உணர்கிறேன். தவறாக இருந்தால் மன்னிக்க‍வும்.'
Thanks
If you say, how can I develop this idea and where do I have to include informationit will be nore helpful for me...

Thanks Nilavan anna.
I'm always aware Praba anna....