Sunday, March 8, 2009

திருமணமான பெண்கள்.....

திருமணத்துக்குப் பின்னர் பெண்கள் வேலைக்குப் போவது சரியா? தவறா? என்று என்னை வதீஸ் அண்ணா கேட்டாரு............
அந்தக் கேள்விக்குப் பதிலாக வேருவது தான் இந்தப் பதிவு..

பெண்கள் வேலைக்குப் போவதில் தப்பு என்ன இருக்கு என்று எனக்குத் தெரியவில்லை. ஏன் என்றால் ஆண்களுக்கு சமமாகப் படிக்கும் பெண்கள் ஆண்களுக்கு சமமாக ஏன் உழைக்கக் கூடாது? அதுவும் கல்யாணத்துக்குப் பின்னர் ( கல்யாணத்துக்கு முன்னர் என்பதை விட..)

கல்யாண நாள் அன்று மணமகனும் மணமகளும் வாக்குறுதி எடுத்து கொள்வார்களே: நாங்கள் இருவரும் எங்கள் வாழ்க்கையின் இன்ப துன்பங்களை சரி சமனாக மதிப்போம் என்று சத்தியம்செய்வார்கள்.
(எதோ இப்படித் தான் சொல்வார்கள் என்று நினைக்கிறேன்)

இப்ப உதாரணத்துக்கு குழந்தைகளை எடுத்துக் கொண்டால், சிலருக்கு அவர்கள் சந்தோசமானவர்கள். சிலருக்கு அவர்களில் குழந்தையைப் பராமரிப்பதே பெரும் பாடா இருக்கிதாம் ( பலர் வாழ்க்கையைப் பார்த்திருக்கிறேன்). என்ட இவள் இப்படி எல்லாம் சொல்றாளே என்று பார்க்கிறீன்கா? கொஞ்சம் பொறுங்க....

கல்யாணத்துக்கு அப்புறம் பொண்ணு என்றால் பிள்ளைகளிப் பார்க்க வேண்டும். அது மட்டுமா கணவனையும் பார்க்கணும் என்று பெரிய பெண்கள் தான் சொல்லுவார்கள் ( அவர்கள் தங்கள் பிள்ளைகளை எப்படி வளர்த்தார்கள் என்பது பெரிய விடயம்). அது தான் இன்ப துன்பங்களை எல்லாம் பகிர்ந்து கொள்வோம் என்று சொன்னார்களே. குழந்தைகளை வளர்ப்பது இன்பமானாலும் துன்பமானாலும் பகிர்த்து கொள்ள வேண்டியது தானே..

இன்னுமொரு விடயாம் கணவன் வேலை செய்கிறாரோ இல்லையோ, ஒரு பெருமைக்காக என் மனைவி கல்யாணத்துக்கு அப்புறமா வேலைக்கு போக வேண்டியதில்லை என்னால் என் குடும்பத்தைப் பார்த்துக் கொள்ள வேண்டும் என்பார்கள். காலப் போக்கில் அவரது உழைப்பு காணாமல் போக வீட்டில் சண்டை சச்சரவு அப்புறம் மணமகள் வீட்டிலிருந்து பணம் தர வேண்டும் என்று எதிர்பார்ப்பு..

இப்படியான பிரச்சனைகளை எல்லாம் தடுக்க வேண்டும் என்றால் பெண்கள் வேலைக்குப் போகத் தான் வேண்டும்.

பெண்களாக விருப்பப் பட்டு வேலைக்குப் போகாமல் இருந்தாலும், காலம் பூராகவும் கணவனால் அதிகளவு சம்பாதிக்க முடியும் என்றாலும் பெண்கள் வேலைக்குப் போகாமல் இருக்கலாம்.

வாழ்க்கையில் படித்துவிட்டு வேலைக்குப் போதாமல் இருப்பது கொடுமை (ஆண்களாக இருந்தாலும் கூட)
வாழ்க்கையே பணமாகாவிட்டாலும் வாழ்வதற்குப் பணம் தேவை என்பது எழுதப் படாத உண்மை. அதனால் எல்லோரும் படிக்க வேண்டும். அதுவும் அதை பங்களாதேசத்துக்கு வந்ததற்கு அப்புறமாக நான் நன்கே உணர்ந்தேன்.

ஆண்களைப் போல பெண்களுக்கு சாதிக்க வேண்டும் என்ற துடிப்பு இருக்கலாமே... (அதுக்காக நீங்க என்ன சாத்திக்கப் போறீங்க என்றெல்லாம் கேக்காக கூடாது) அதனால் பெண்கள் திருமணத்துக்கு அப்புறம் வேலைக்குப் போகலாம் என்பது என் கருத்து...

வதீஸ் அண்ணா ஏதோ உளறி இருக்கிறேன் என்பது மட்டும் தெரிகிறது. நீங்கள் கேட்டதற்கு விடை கிடைத்ததா?கிடைக்கவில்லை என்றால் சொல்லுங்க (பயப்படாதீங்க இன்னொரு பதிவு எல்லாம் போட மாட்டேன்- நீங்க கேள்வி கேட்ட பதில் சொல்றேன், பதிவாக இல்லை செய்தியாக)

11 comments:

SASee said...

ஏதோ சொல்லுறீங்க........
நாங்களும் பாக்கிறோ............

ஆண்களோ பெண்களோ......? அவங்கவங்க உழைச்சாதான் யாருக்கும் நல்லது. வாழ்க போர போக்கப்பாத்தா இரண்டு பேர் வாழமுடியாது ஒருத்தர் உழைச்சி...........

Sinthu said...

அண்ணா அதைத் தான் நானும் சொன்னேன். பெண்கள் வேலைக்குப் போக வேணும்..

கல்வி அபிவிருத்தி ஒன்றியம் said...

சிந்து உங்களின் உலரலாகத்தேரியவில்லை உங்களின் உள்ளக்குமுறல் உங்களைப்போல் எல்லோரும் இருக்க வேண்டும் நான் ஆணும் பெண்ணும் சமமென நினைப்பவன் .... சிலவேளை ஆணைவிட பெண்ணை மேலாக நினைப்பதுண்டு என் தயை உயர்ந்த நிலையில் வைத்து பார்ப்பவன் என் பெண்கள் ஆண்களை விட குறைந்தவர்கள் என்று வீண்டா விவாதம் செயும் ஆண்களிடம் கேட்கிறேன். அவர்களை பத்துமாதம் சுமந்து பெற்றவளும் ஒரு பெண்தான் என்பதை உணர்வார்கலானால் சரிதான்...

குமரை நிலாவன் said...

ஆணும் பெண்ணும் வேலைக்கு போறதில்
எந்த தவறும் இல்லை

ஆணும் பெண்ணும் வேலைக்கு
போனால்தான் இப்ப உள்ள பொருளாதார
சூழ்நிலையை சமாளிக்க முடியும்
பெண்கள் கல்யாணத்திற்குப் பிறகு வேலைக்கு
போறதிலேயும் தவறு ஏதும் இல்லை
பெண்கள் குழந்தைபேறு அடையும் போது
சில சிரமங்களை எதிர் நோக்கவேண்டியுள்ளது
குழந்தை பிறந்து பள்ளிக்கு செல்ல ஆரம்பித்து
விட்டால் பிறகு வேலைக்கு செல்லலாம் .
இது என்னோட கருத்து .

Anonymous said...

தெளிவாகவே சொல்லியிருக்கிறீர்கள் சிந்து... பெண்கள் வேலைக்குப் போவதில் தவறில்லை.. அங்கே தவறுகளிலே தடம் புரளாதவரை...

பெண்களுக்கான உங்கள் கவிதைகளும் மிகவும் நன்றாகவே உள்ளது...


வாழ்த்துக்கள் சிந்து...

kuma36 said...

இதற்கான பின்னூட்டத்தை ஒரு பதிவாகவே நேரம் கிடைக்கும் போது போடுகின்றேன்.

Highlights

//காலம் பூராகவும் கணவனால் அதிகளவு சம்பாதிக்க முடியும் என்றாலும் பெண்கள் வேலைக்குப் போகாமல் இருக்கலாம்.//

Sinthu said...

நன்றி சந்துரு அண்ணா.

"
நிலாவன் said...
ஆணும் பெண்ணும் வேலைக்கு போறதில்
எந்த தவறும் இல்லை

ஆணும் பெண்ணும் வேலைக்கு
போனால்தான் இப்ப உள்ள பொருளாதார
சூழ்நிலையை சமாளிக்க முடியும்
பெண்கள் கல்யாணத்திற்குப் பிறகு வேலைக்கு
போறதிலேயும் தவறு ஏதும் இல்லை
பெண்கள் குழந்தைபேறு அடையும் போது
சில சிரமங்களை எதிர் நோக்கவேண்டியுள்ளது
குழந்தை பிறந்து பள்ளிக்கு செல்ல ஆரம்பித்து
விட்டால் பிறகு வேலைக்கு செல்லலாம் .
இது என்னோட கருத்து"
ஏற்றுக்கொள்ளக் கூடியது தான் ஆனால் வேலை காத்திருக்குமா என்பது சந்தேகமே..
"ஷீ-நிசி said...
தெளிவாகவே சொல்லியிருக்கிறீர்கள் சிந்து... பெண்கள் வேலைக்குப் போவதில் தவறில்லை.. அங்கே தவறுகளிலே தடம் புரளாதவரை...

பெண்களுக்கான உங்கள் கவிதைகளும் மிகவும் நன்றாகவே உள்ளது...


வாழ்த்துக்கள் சிந்து...'
நன்றி

" கலை - இராகலை said...
இதற்கான பின்னூட்டத்தை ஒரு பதிவாகவே நேரம் கிடைக்கும் போது போடுகின்றேன்.

Highlights

//காலம் பூராகவும் கணவனால் அதிகளவு சம்பாதிக்க முடியும் என்றாலும் பெண்கள் வேலைக்குப் போகாமல் இருக்கலாம்.//'
என்ன எழுதப் போறீங்க.

Vathees Varunan said...

மிக்க நன்றி சிந்து.
நன்றாக இருக்கிறது. ஒருபெண்ணிடமிருந்து அல்லது பெண்ணின் பார்வையில் இந்த பிரச்சனை எப்படி இருக்கிறது என அறியவே நான் அப்படி உம்மிடம் கேட்டேன்.
நிறைய பயனுள்ள தகவல்கள் எனக்கு கிடைத்தது. இதை நான் நிச்சயம் என்னுடைய பகுதிக்குள் இணைத்து கொள்ளுவேன்.

Sinthu said...

ஏன் ஏன் இப்படி எல்லாம், பயனற்றதை மாறி பயனுள்ள என்று சொல்லீட்டீன்களோ வதீஸ் அண்ணா.... நான் கடைசியா எழுதி இருந்ததை நீங்கள் கவனிக்கவில்லைப் போல..

Anonymous said...

வதீஸ் அண்ணாவுக்கு நல்ல பதில் தான் கொடுத்திருக்கிறீங்க சிந்து.....

நிகழ்காலத்தில்... said...

நல்ல சிந்தனை. பொதுவாக இது நம் பெண்களிடம் குறைவாகத் தான் உள்ளது.
இது வளர வேண்டும். இதற்கு உங்கள் எழுத்து உதவும்.
வாழ்த்துக்கள்