Sunday, March 8, 2009

பெண்

பெருமை கொள்ளடி
மகளீர் என்பதனா
சிறுமை உனக்கல்லடி
பெண்ணே

வாழ்கையைப் படிக்க
உன் பிறப்பு
உதவியது - நீ
பெண் ஆதலினாலே....

வர்ணிப்புப் பொருளாக
இருக்கும் - நீ
உதாரணமாக
எவ்வளவு நேரம்

எழ்மை உனக்கானதல்ல
வெல்வாய் - நீ
பெண்ணென - நீ
பெருமை கொண்டால்

அனைவருக்கும் மகளீர் தின நாள் வாழ்த்துக்கள்...
(குறிப்பாகப் பெண்களுக்கு - பெண்கள் வருகை குறைவாக இருந்தாலும் கூட..)

பி.கு: கலை அண்ணா நன்றி முதலாவதாக மகளீர் தின வாழ்த்துச் சொன்னதற்கு0

17 comments:

Anonymous said...

"அனைவருக்கும் மகளீர் தின நாள் வாழ்த்துக்கள்..."

சிந்து உங்களுக்கும் எனது வாழ்த்துக்கள் உரித்தாகட்டும்

கல்வி அபிவிருத்தி ஒன்றியம் said...

மகளிர் தின வாழ்த்துக்கள் சிந்து...

மகளிர் தினத்தில் மட்டுமல்ல சிந்து எந்த நாளும் பெண்களின் சிறப்புக்கள் பேசப்பட வேணும். பெண்கள் அடக்கி ஒடுக்கப்பட்ட காலமல்ல இது. உண்மையிலேயே கவலைக்குரிய விடயம் உங்களை போல் பெண்கள் எல்லாம் விழிப்படைய வேண்டும் . பாரதியின் கனவுகள் நிறைவேற வேண்டும். அனைவரும் பாரதி கண்ட புதுமை பெண்ணாக மாற வீண்டும். ........... சிந்து நிங்களும் ஒரு பாரதி கண்ட புதுமைபென்தான்.........

Sinthu said...

நன்றி துஷா அக்கா

"
shanthru said...
மகளிர் தின வாழ்த்துக்கள் சிந்து...

மகளிர் தினத்தில் மட்டுமல்ல சிந்து எந்த நாளும் பெண்களின் சிறப்புக்கள் பேசப்பட வேணும். பெண்கள் அடக்கி ஒடுக்கப்பட்ட காலமல்ல இது. உண்மையிலேயே கவலைக்குரிய விடயம் உங்களை போல் பெண்கள் எல்லாம் விழிப்படைய வேண்டும் . பாரதியின் கனவுகள் நிறைவேற வேண்டும். அனைவரும் பாரதி கண்ட புதுமை பெண்ணாக மாற வீண்டும். ........... சிந்து நிங்களும் ஒரு பாரதி கண்ட புதுமைபென்தான்........."
என்னத்தை விழிப்படைய...
புதுமைப் பெண்ணா? நானா................. ஏன் ஏன் ஏன்?
அடக்கி ஒடுக்கப் பட்ட காலம் இது இல்லை என்று நீங்க சொறீங்க. நான் நிறையப் பேரை காண்கிறேன்.. இப்போதும் கூட... ஆண் ஆதிக்கம் இருக்கத் தான் செய்கிறது. ஆனால் உங்களைப் போல் சிலரும் இருக்கத் தான் செய்கிறார்கள்.
உங்களைப் போன்றோருக்கு எனது நன்றி....

Sinthu said...

அடடா.............. நன்றி சொல்ல மறந்திட்டேனே. நன்றி சந்துரு அண்ணா.

SASee said...

அனைத்து மகளீருக்கும் வாழ்த்துக்கள்

"எழ்மை உனக்கானதல்ல
வெல்வாய் - நீ
பெண்ணென - நீ
பெருமை கொண்டால்"

வாழ்த்துக்கள் சிந்து

Sinthu said...

நன்றி அண்ணா..

கல்வி அபிவிருத்தி ஒன்றியம் said...

இன்று மட்டுமல்ல சிந்து நீங்கள் அதிகம் பெண்கள்பற்றி எழுத வேண்டும். என்ன செய்வது ஆணாதிக்கம் செலுத்தும் ஆண்கள் இருக்கத்தான் செய்கிறார்கள் . உங்களைப்போன்ற பெண்கள் விழிப்படைந்தால் அவர்களாலும் எதுவும் செய்யமுடியாது...... தடர்ந்தும் எழுதுங்க சிந்து வாழ்த்துகள்.....

குமரை நிலாவன் said...

அனைத்து மகளிர்க்கும்
"மகளிர் தின வாழ்த்துக்கள்"

வாழ்த்துக்கள் சிந்து

Anonymous said...

சிந்து, உங்களுக்கும் எனது மகளிர் தின வாழ்த்துக்கள்.....

Sinthu said...

நிச்சயமாகப் பெண்களைப் பற்றி எழுதுவேன்.

Sinthu said...

"
நிலாவன் said...
அனைத்து மகளிர்க்கும்
"மகளிர் தின வாழ்த்துக்கள்"

வாழ்த்துக்கள் சிந்து"
நன்றி..

Sinthu said...

நன்றி கீர்த்தனா..

Anonymous said...

மகளிர் தின வாழ்த்துக்கள் சிந்து...
கவிதை மகளிர் தின ஸ்பேசலா???

Subankan said...

நேற்று வர மறந்து விட்டேன்.
மகளீர் தின வாழ்த்துக்கள் சிந்து

Sinthu said...

"
கவின் said...
மகளிர் தின வாழ்த்துக்கள் சிந்து...
கவிதை மகளிர் தின ஸ்பேசலா???'
நிறைய நாட்களுக்குப் பின்னர் வந்திருக்கிறீர்கள். மகளீர் தினம் வந்ததால் ஞாபகம் வந்ததோ? ஸ்பெஷல் ஒன்றும் இல்லை. நம்மளைப் பற்றிப் போடா நேரம் பார்த்திட்டு இருந்தேன். கிடைத்த வாய்ப்பைப் பயன்படுத்துவது தானே புத்திசாலித் தனம் (இதை நான் சொல்லவில்லை, அதற்காக நான் புத்திசாலியும் இல்லை..)

Sinthu said...

நன்றி கவின் அண்ணா...
வாழ்த்துக்கும் வருகைக்கும்.

Sinthu said...

"Subankan said...
நேற்று வர மறந்து விட்டேன்.
மகளீர் தின வாழ்த்துக்கள் சிந்து"
நன்றி...
மறதியா.. இந்த வயதிலா...