Saturday, March 28, 2009

திருப்பு முனை


என் வாழ்க்கையிலேயே மறக்க முடியாத நாள்.. காரணம், என் வாழ்க்கையையே திருப்பிப் போட்ட இந்த நாளை எப்படி மறக்க முடியும். இவள் என்ன சொல்கிறாள் என்று நினைக்கிறீர்களா? அது தானுங்க இந்த சிந்து என்றவள் இந்த பங்களாதேசத்துக்கு வந்து இன்றுடன் ஒரு வருடம் முடிகிறது, அதைப் பற்றித் தான் இங்க அலம்பலாம் என்று பதிவை எழுதத் tதொடங்கினேன். அது எப்படிப் போய் முடியும் என்று தெரியாது.
வாழ்க்கையில் பிரச்சனைகள் இருந்த போதும், அம்மாவும் அண்ணாவும் இருக்கிறார்கள் தானே என்ற துணிவில் இருந்த அந்த நாட்களை நினைக்கையில், எதையோ இன்று இழந்த உணர்வு. (எல்லா விடயங்களையும் நான் பகிர்ந்துகொள்ளும் உறவுகள் - காதல் விடயங்களாக இருந்தாலும் கூடவே.. என் காதலா என்று கேட்க்கக் கூடாது, அது என் வகுப்பு நண்பர்களுடைய காதல்கள்..)
என் வாழ்க்கையைத் திருப்பியது மட்டும் அல்லாமல் வாழ்கை என்பதை சிறிதளவேனும் கற்பித்த காலப் பகுதியும் இதுவே (வாழ்க்கை என்பதை அறிந்ததால் தான் வாழ்க்கையே வேண்டாம் என்று தோன்றியதோ)
சாதிக்க வேண்டும் என்று தோன்றிய காலம் போய் வாழ்க்கையின் வேதனையான காலம் என்னையும் எட்டிப் பார்க்கத் தொடங்கியதும் இந்த நாசமாகிப் போன காலப் பகுதியில் தான்.
இங்கு வந்ததில், நான் அறிந்து ஒரே ஒரு நன்மை மட்டும் தான். பல நல்ல உறவுகள் கிடைத்தன, முக்கியாமாக் வெற்றிக் குடும்பத்தின் (வானொலித் துறையில் நாட்டம் அதுகம் என்பதால் அம்மாவை தொடர் நாடகம் பார்க்க விடாமல் சூரியன் பண்பலை கேட்ட காலம், அம்மா கேட்பார் "நீ அவங்களைப் பற்றி எதுக்கு என்கிடா சொல்ற, அவங்களுக்கு உன்னைத் தெரியுமா?" நான் யாரு நான் சொல்வேன் "எனக்குப் பிடித்தவர்களைப் பற்றி நான் கதைப்பதில் என்ன தப்பு இருக்கிறது. சினிமா நடிகர்களைப் பற்றி எல்லோரும் கதைக்கிறாங்களே, அது எதுக்கு?" அம்மா பாவம் எதுவும் பேச மாட்டாங்க (இப்ப எல்லாக் கதைகளையும் அவங்களிடம் சொல்ல முடியாமல் இருப்பதையிட்டும் கவலை தான். இந்த ஒரு வருட காலப் பகுதியில் நடந்தவற்றைச் சொல்வதற்கு ஒரு மாத காலப் பகுதி காணுமா என்பது கேள்விக் குறிதான் (அது தான் வருகிற ஆடியில் ஊருக்குப் போறேனே) நட்பு மற்றையது பதிவுலக உறவுகள்...(நான் அதிகம் கற்றுக் கொண்டது இங்கே தான்) இதை எல்லாம் விட்டால் என்ன நல்ல விடயங்கள் என்று பார்க்கப் போனால், யாவுமே மனதில் நிற்காதவை (கேட்ட விடயங்கள் அதிகமாக நடந்ததால் தான்) ஆனால் கிடைத்த பல உறவுகளைத் தவற விட்டதும் இங்கு தான் என்பது சோகக் கதை சொந்தக் கதை..

ஒரு வருடம் ஒரு மனிதனை எப்படி எல்லாம் மாற்றுகிறது என்று புரிந்துகொண்டேன். (அப்புறம் ஒரு நிமிடமே மாத்துகிறது, நீங்கள் என்ன ஒரு வருடம் என்றீங்க என்று குண்டக்க மண்டக்க எல்லாம் கேட்கப்படாது)
iந்த ஒரு வருடத்தில் நடந்த பல விடயங்களை மறக்க வேண்டியுள்ளது, ஆனால் முடியாவில்லை (மன வலியைக் குறைக்க வழி சொல்லுங்கள்)....
"நன்றி மறப்பது நன்றன்று நன்றல்லது
அன்றே மறப்பது நன்று" (வள்ளுவர் நிச்சயமாக இப்படி எழுதி இருக்க மாட்டார் - எனக்குத் தெரிந்த தமிழில் எழுதியுள்ளேன். தமிழ்ப் பற்றாளர்கள் மன்னிக்க வேண்டும்.)
வாழ்க்கைக்கு ஒத்து வருமா என்பது சந்தேகம் தான்....

பி.கு: எழுத்துப் பிழைகள் அதிகம் இருந்திருந்தால் மன்னிக்கவும்.... அவசரமான பதிவு..

17 comments:

kuma36 said...

////(மன வலியைக் குறைக்க வழி சொல்லுங்கள்)..////


::::::::::::::::::::::::::::::::::::
தியானம் தியான்ம் தியானம் தியானம்.

Sinthu said...

நல்ல பதில்..

Thusha said...

ஆமாம் சிந்து இந்த ஒரு வருடத்தில் பெற்றுக் கொண்டவை, இழந்தவை, படித்துக் கொண்டவை, எங்களுக்குள் எங்களையே தேடிக்கொன்டது, என்று நிறைய கூறிப்பாக நான் கற்றுக் கொண்டேன்

கல்வி அபிவிருத்தி ஒன்றியம் said...

வாழ்க்கை என்றால் ஆயிரம் இருக்கும் . இதுக்கு போய்கவலை படக்குடாது சிந்து.... எதிலும் நம்பிக்கை வையுங்கள் வெற்றி நிட்சயம்.........

////(மன வலியைக் குறைக்க வழி சொல்லுங்கள்)..////

கலை சொன்ன வழி நல்ல வழி சிந்து.............

Anonymous said...

வங்கதேசம் வந்து ஒருவருசமாச்சா..!
வாழ்த்துக்கள்!
////(மன வலியைக் குறைக்க வழி சொல்லுங்கள்)..////
தெரியாதே..!

தமிழ் மதுரம் said...

சிந்து பதிவு நன்றாக உள்ளது...பிரிவுத் துயர் பற்றி அதிகமாக எழுதியுள்ளீர்கள்??
பெற்றவர்களைப் பிரிந்து வாழ்வது கொடுமை தான்?
எல்லாம் நன்மைக்கே என்று இருப்பதும் நன்மைக்கே..!

தொடருங்கள்.!

SASee said...

கலை அவர்கள் சொல்வது போல
தியானம் நன்று தான்.ஆனால்.....

நான் நினைக்கிறேன், சில மனவலிகளை
மறக்க தேவையில்லை, அவை எம்மை அவ்வப்போது வலித்து துன்புறுத்த வேண்டும். அந்த வலியில் சுகம் இருப்பதாயும் கேள்விப்பட்டிருக்கிறேன்!

எப்படியோ காலமாற்றம் அனைத்தையும் மாற்றும்
நாம் மாற அல்லது மாற்ற கூடாது என நினைப்பவை கூட....

Anonymous said...

தமிழ்மணத்தில் இனைத்து விட்டீர்களா...!
வாழ்த்துக்கள்!

Sinthu said...

துஷா அக்கா, பார்த்துக் கொண்டு தானே இருக்கிறேன்...

வெற்றி நிட்சயம் இது வீர சத்தியம் என்று வசனம் பேசிரீங்களா சந்ரு அண்ணா.....

"கவின் said...
வங்கதேசம் வந்து ஒருவருசமாச்சா..!
வாழ்த்துக்கள்!
////(மன வலியைக் குறைக்க வழி சொல்லுங்கள்)..////
தெரியாதே..!"
நீங்கள் வாழ்த்தியாவது நல்லா இருக்கிறேனா என்று பாப்பம்.. தெரியாது என்றால் அதை ஒருக்கால் சொல்லவும் வேண்டுமோ?

எல்லாம் நன்மைக்கே என்று நினைத்த காலம் மலை ஏறிப் போய்விட்டதே கமல் அண்ணா

நீங்கள் சொல்வதும் சரி தான் சசீ அண்ணா..

கவின் said...
தமிழ்மணத்தில் இனைத்து விட்டீர்களா...!
வாழ்த்துக்கள்!"
நக்கல் பேச்சா?

கீர்த்தனா said...

சிந்து, ஒன்றை பெற வேண்டுமென்றால் இன்னுமொன்றை இழக்க வேண்டுமாம் என்று கேள்வி பட்டிருக்கிறேன். அது தான் இதோ?????

Sinthu said...

கீதா நீங்கள் சொல்வது சரி தான், ஆனால் எதைப் பெறுவதற்கு என்பதும் முக்கியமே.... இங்கு எதைப் பெறுகிறோம் என்று எனக்குத் தெரியவில்லை..

Subankan said...

//ஒரு வருடம் ஒரு மனிதனை எப்படி எல்லாம் மாற்றுகிறது என்று புரிந்துகொண்டேன்//

நானும்தான். எனக்கு இரண்டு வருடங்கள். ஆனால் வலியும் வேதனையும் ஒன்றுதானே? இலங்கையில் இருப்ப‍தாகப் பெயர்தான். ஆனால் நானும் ஒரு வருடமாகப் பெற்றோரைப் பார்க்க‍வில்லை. விடுமுறை இல்லாத்து மட்டுமல்ல‍, .......வேண்டாம்.

//அது தான் வருகிற ஆடியில் ஊருக்குப் போறேனே//

நானும்தானே!!!!!!

இதை எழுதி எதையெதையோ ஞாபகப்ப‍டுத்தி விட்டீர்கள் சிந்து. விரைவில் இதைப்போல ஒரு பதிவில் நானும் ........

Subankan said...

பதிவைப் படித்த‍மா பின்னூட்டினமா என்று இருக்காமல் ரொம்ப்ப் புலம்பிட்ட‍னோ?? எல்லாம் சொந்தக்க‍தை, சோக்க் கதைதான்.

Subankan said...

//கலை - இராகலை said...

////(மன வலியைக் குறைக்க வழி சொல்லுங்கள்)..////


::::::::::::::::::::::::::::::::::::
தியானம் தியான்ம் தியானம் தியானம்.//

தினமும் முயல்கிறேன்.

kuma36 said...

ஒரு வருஷமாச்சு ஸ்வீட் தாங்க‌

குமரை நிலாவன் said...

வாழ்க்கை என்றால் ஆயிரம் இருக்கும்
வாசல் தோறும் வேதனை இருக்கும்
வந்த துன்பம் எதுவென்றாலும் வாடி நின்றால்
ஓடுவதில்லை
உனக்கும் கிழே உள்ளவர் கோடி நினைத்துப் பார்த்து நிம்மதி நாடு

இது ஒரு பழைய சினிமா பாடல்
மனவலி அதிகம் இருக்கும் போது
நான் கேட்பது ....

////(மன வலியைக் குறைக்க வழி சொல்லுங்கள்)..////

கலை சொன்ன வழி நல்ல வழி சிந்து.............

Sinthu said...

பெற்றோரைப் பிரிந்திருப்பது மட்டும் பிரச்சனையானால் பரவாயில்லையே...........
அந்த இடைவெளியில் என்ன வரும் என்பதை சொல்லுங்களேன்.... உங்கள் பதிவை எதிர்பார்த்திருக்கிறேன். சீக்கிரமாகப் போடுங்கள்..
எல்லோரும் அதைத் தானே செய்கிறோம்.. நானும் எதையோ எழுத வந்தேன், எதோயோ எழுதி முடித்தேன். பார்க்கப் போனால் எல்லாம் ஒன்று தான்..

நானும் முயல்கிறேன்............... கலை அண்ணா...ஆனால் முடியல்ல..


வாழ்க்கை வெறுத்தாலும் ஸ்வீட் கொடுப்பாங்களா.............. அது எந்த ஊரில... கலை அண்ணா...

மயக்கமா கலக்கமா பாட்டுத் தானே........ என்னைக் கவர்ந்த பாட்டு................. வீட்டி இருக்கும் பொது அடிக்கடி கேட்பேன்.. இப்ப முடிவதில்லை....
My favorite singer SPS