Thursday, January 1, 2009

தமிழ் திரைப்பட பாடல்......

எங்கள் தமிழ் இப்போது பல இடங்களில் பிரயாணம் செய்துகொண்டிருக்கிறது என்பது யாவரும் அறிந்ததே.. ஆனால் நான் சொல்ல போவது கொஞ்சம் வித்தியாசமாக இருக்கும் என நம்புகிறேன்.
ஏன் என்றால் சிலர் தான் இதை அறிந்திருப்பார்கள். தமிழ் சினிமா பாடல்கள் (ஆங்கிலம் கலந்தவையே தான்..) கூட பலரால் கேட்கப்படுகின்றன (பிற மொழி நாட்டவர்களால்).அதற்கு காரணம் வெளி நாடுகளை இருக்கும் இந்த நல்ல உள்ளங்கள் தான்....(சும்மா டூப்.. தானுங்கோ...)


இப்ப கொஞ்ச நாட்களுக்கு முன்னர் வந்த வில்லு பட பாட்டை தான் சொல்றேன். தமிழ் நாட்டு பாட்டு ஒன்று இப்ப பங்களாதேசம் முழுவதும் (ஆக புளுக கூடாது தானே பரவலாக இல்லாவிட்டாலும் சில இடங்களில்) தூள் கிளப்பிக் கொண்டிருக்கிறது எண்டால் நம்ப கூடியதாக இருக்கிறதா........? ஆனால் அது தான் உண்மை. இந்த பாட்டை அநேகமாகமான நேபாளம், பங்களாதேசம், கம்போடியா, பாகிஸ்தான் ஆகிய நாடுகளைச் சேர்ந்தவர்களின்(அவங்க எல்லோரும் பங்களாத்சத்தில் தான் இருக்கிறார்கள்.) கையடக்கத் தொ(ல்)லைபெசிகளில் காணக்கூடியதாக இருக்கிறது (கொடுமை என்ன என்றால் இரு பாடங்களுக்கு இடையில் ஒரு சின்ன இடைவேளை எண்டு ஒண்டு விடுவாங்களே அந்த நேரம் கூட கேக்கிறாங்க..)பாட்டு சின்னது அதில இருக்கிற தமிழ் வார்த்தைகள் அதைவிட சின்னவை ஆனாலும் அது ஒரு தமிழ் பாட்டு தானே. அதுவும் ஒரு தமிழ் படத்தில வந்த பாட்டு இப்படி எல்லாம் சுற்றுகிறது என்றால் பெருமையான விடயம் தான்.
(தமிழ் பற்றாளர்கள் வாசித்தால் என்னை மன்னிக்க வேண்டும்.) அதுவும் நியாயம் தானே ஏன் என்றால் எங்களின் தாய் மொழியில் பிற மொழியான ஆங்கிலம் கலப்பதா..அது எப்படி சாத்தியாமாகும், அதை எப்படி அனுமதிக்கலாம் என்றெல்லாம் கேட்டால் எனக்கு பதில் சொல்ல வராதுங்கோ...

என்ன பாட்டு என்று நான் உங்களுக்கு சொல்ல தேவை இல்லை தானே..
வில்லு படம் அதுவும் சின்ன ஆங்கிலம் கலந்த அழகான அடக்கமான பாடல்....
நல்ல விளக்கம் தந்திருக்கிறேனே..................
போதுமா.......?

6 comments:

தேவன் மாயம் said...

என்ன பாடு என்று நான் உங்களுக்கு சொல்ல தேவை இல்லை தானே..
வில்லு படம் அதுவும் சின்ன ஆங்கிலம் கலந்த அழகான அடக்கமான் பாடல்....
நல்ல விளக்கம் தந்திருக்கிறேனே..................
போதுமா////

வெளக்கம் ரொம்ப வெளக்கமா
இருக்கும்மா!!!!!!!!

Sinthu said...

அண்ணா ரொம்ப ரொம்ப நன்றி...
இப்படி அடிக்கடி வாங்கோ.........

சரவண வடிவேல்.வே said...

வில்லு படம் அதுவும் சின்ன ஆங்கிலம் கலந்த அழகான அடக்கமான பாடல்....
நல்ல விளக்கம் தந்திருக்கிறேனே..................
போதுமா.......? ///

அது என்ன பாட்டுங்க??? ஏதாவது க்ளு இருந்தால் தரவும்...

Sinthu said...

"அது என்ன பாட்டுங்க??? ஏதாவது க்ளு இருந்தால் தரவும்..."
என்ன அண்ணா விடை தெரிந்து கொண்டே இப்படி கேட்பது நியாயமாக படுகிறதா?
இது தானே வேண்டாம் என்கிறது.

Anonymous said...

"கையடக்கத் தொ(ல்)லைபெசிகளில் காணக்கூடியதாக இருக்கிறது "

கையடக்க தொலைபேசிகளில் மட்டும் இல்ல சிந்து, கணணி அறையில் pendrive உடன் ஒரு நீண்ட queue தொல்லை.....அந்த பாட்டை தருமாறு.....

Sinthu said...

"keerthana கூறியது...
"கையடக்கத் தொ(ல்)லைபெசிகளில் காணக்கூடியதாக இருக்கிறது "

கையடக்க தொலைபேசிகளில் மட்டும் இல்ல சிந்து, கணணி அறையில் pendrive உடன் ஒரு நீண்ட queue தொல்லை.....அந்த பாட்டை தருமாறு"


அட அதை எல்லாம் மறந்துவிட்டேனே... illegal ஆக எல்லோ download பண்ணினீர்கள்.. .
கவலை படாதீங்கோ............ நான் யாருக்கும் சொல்ல மாட்டேனுங்கோ..........