யாரைப் பற்றிச் சொல்லப்போகிறேன் என்று எல்லோருக்குமே தெரியும் என்று நினைக்கிறேன், என் என்றால் இன்றைய நாளில் இந்த பதிவு வருவதால் தான். நேற்றைய நாள் என்பது யாவருக்குமே முக்கியமான நாள் ( எல்லா வகையிலுமே). அதிகமானவர்களால் எதிர்பார்க்கப்பட்டிருந்த நாள் அல்லவா இது.
ஒபாமா அமெரிக்காவின் அதிபராக தெரிவு செய்யப்பட்ட தினத்திலன்று பொதுவாக எல்லா அமெரிக்கர்களும் சீ........... சீ......... ஏனைய நாட்டவர்களும் தான் சுய நினைவு இல்லாது திண்டாடிக்கொண்டிருந்தனர். (நேரடியான அனுபவம் தான்.) எங்கள் கல்லூரியில் அன்றைய தினம் கல்வி நடவடிக்கைகள் வழமை போல் நடைபெறவில்லை. எமது ஆசிரியர்கள் யாவருமே ஒபாமாவுக்கு வாக்களித்த போதும் ஒபாமாவே வெற்றியடைவார் என்று தெரிந்திருந்த போதும் கூட அவர்களால் சாதாரணமாக இருக்க முடியவில்லை. (சாதாரமாக இருக்கக் கூடியவிடயமா இது..)
நேற்றைய நாள் ஒபாமாவின் பேச்சிலிருந்து அவரின் குணத்தை நன்கே அறிந்துகொண்டதாக ஒரு நினைப்பு என்னுள். நான் செய்வேன், என்னால் செய்ய முடியும் என்று சொல்லும் அரசியல்வாதிகளின் மத்தியில் நாங்கள் செய்வோம், செய்ய முடியும் (இன்னும் பல இருக்கின்றன, என் பார்வையில் இது பெரிதாகத் தெரிந்தது) என்று சொன்னதனூடு புரிந்துகொண்டேன். "நான்" என்ற அகன்காரத்துக்குரிய சொல்லைத் தனது பேச்சில் சேர்த்துக் கொள்ளவே இல்லை அந்த பெரிய மனிதர்.
நகைச்சுவையான விடயம் என்னவென்றால் (ஒபாமாவை ஒரு உன்னதமான உயர்ந்த மனிதராக நினைப்பவர்களுக்கு மட்டுமே) சத்தியப்பிரமாணம் செய்துகொள்ளும் போது தடுமாறிக்கொண்டது. (ஆணைக்கும் அடிசறுக்கும் என்று இதைத் தான் சொல்வார்களோ) அதன் பின்னர் கிடைத்த ஒபமாவின் புன்னகை - அடடா வர்ணிக்கத் தெரியாதுங்கோ எனக்கு......
அதை விட ஒபாமா என்ற பெரிய மனிதர் செய்த ஒரு நல்ல விடயம் இந்த சிந்துவுக்கே புரியக் கூடிய ஆங்கிலத்தில் பேசியது தான்.. நன்றிங்கோ......
அப்படி பேசினாருப்பா.........
மறுபடியும் நன்றி.......
12 comments:
நகைச்சுவையான விடயம் என்னவென்றால் (ஒபாமாவை ஒரு உன்னதமான உயர்ந்த மனிதராக நினைப்பவர்களுக்கு மட்டுமே) சத்தியப்பிரமாணம் செய்துகொள்ளும் போது தடுமாறிக்கொண்டது. (ஆணைக்கும் அடிசறுக்கும் என்று இதைத் தான் சொல்வார்களோ) அதன் பின்னர் கிடைத்த ஒபமாவின் புன்னகை - அடடா வர்ணிக்கத் தெரியாதுங்கோ எனக்கு......///
அவர் தடுமாறியதை
கவணித்து விட்டாய்.
முக்கிய விஷயங்களில்
தடுமாறாமல் இருந்தால்
சரி!!!
நீங்கள் சொல்வது சரி...........
சிந்து கலக்கிறீங்க போங்க ........ வாழ்த்துக்கள்.
சிந்து கலக்கிறீங்க போங்க ........ வாழ்த்துக்கள்.
கலக்கிறதுக்கு என்கிட்ட குட்டையும் இல்லை காப்பியும் இல்லைங்கோ... சும்மா prapa அண்ணா..
வருகைக்கு நன்றி........
"அதன் பின்னர் கிடைத்த ஒபமாவின் புன்னகை - அடடா வர்ணிக்கத் தெரியாதுங்கோ எனக்கு......"
மொய்யளுமா சிந்து சும்மா அவுத்து விடுங்க ஒரு கவிதையை உங்களுக்கு தெரியாததா நக்கல் எல்லாம் இல்லப்பா மொய்யலுதன் சொல்லுறன்
துஷா
வார்த்தையே வருதில்லையாம் அதில எப்படி கவிதை...............
நீங்கள் தானே கவிதாயினி ஒரு கவிதை சொல்லுங்கோ.......
அழகிலா மயங்குகிறது தானே கேள்விப்பட்டு இருக்கேன் நீங்க என்ன சிரிப்பிலா மயங்கிட்டிங்களா சிந்து
அந்த மனிதரைப் பிடிக்காதவர்கள் யாராவது இருப்பார்களா......தப்ப சொல்லிட்டேன் எதிர்க் கட்சி எண்டு ஒன்று எப்போதுமே இருக்கும் தானே..................
//"நான்" என்ற அகங்காரத்துக்குரிய சொல்லைத் தனது பேச்சில் சேர்த்துக் கொள்ளவே இல்லை அந்த பெரிய மனிதர்.//
பெரிய மனிதர்கள் என்றால் அப்படித்தான் இருப்பார்கள்...
நல்ல பதிவு...தொடர்ந்து எழுத வாழ்த்துக்கள்...
வருகைக்கு நன்றி............ உங்க ஆதரவு இருந்தா தொடர்ந்து எழுத நான் தயார்....
"அதை விட ஒபாமா என்ற பெரிய மனிதர் செய்த ஒரு நல்ல விடயம் இந்த சிந்துவுக்கே புரியக் கூடிய ஆங்கிலத்தில் பேசியது தான்.. "
எனக்கும் ஏதோ எமது சில ஆசிரியர்களை விடவும் புரிந்து கொள்ள கூடியதாய் இருந்தது.....
Post a Comment