வந்ததும் தான் வந்திட்டீங்க வாசியுங்கோ.............
அவனைத் திருத்த - நீ
போட்ட நாடகமே - உன்
வாழ்க்கையை நாடமாக்கியதே..
**********************************
எங்கு தேடியபோதும்
கிடைக்காத - நீ
தேடாமல் இருக்கையில்
பாரம் என்று நினைக்கையில்
அவளின் காதல் செத்திருக்கையில்
வந்ததன் பயன் தான் என்ன.....?
**********************************
உனக்காகவே உயிரை
வைத்திருந்தவளை
உயிருடன் புதைக்க - நீ
காரணமானது தான்
வேதனைக்குரியதடா......?
**********************************
கண்களை மட்டுமா
குருடாக்கியது - உன் காதல்
என் வாழ்க்கையையும்
அல்லவா.........?
எதையும் நான்
பார்க்க முடியாத நிலையில்
என்னைப் பார்த்து
சிரிக்கும் பலருக்கு
பதில் சொல்ல முடியாத
கோழையாக.............
கிறுக்கல்களின் சங்கமம் என்று இதைத் தான் சொல்வார்களோ...........?
15 comments:
///எங்கு தேடியபோதும்
கிடைக்காத - நீ
தேடாமல் இருக்கையில்
பாரம் என்று நினைக்கையில்
அவளின் காதல் செத்திருக்கையில்
வந்ததன் பயன் தான் என்ன.....?///
தேடலில் கிடைக்காவிடின்
காதல் பாரமகிடுமோ??
காதல் செத்திடுமோ?
ஒரு வேளை
கிடைக்க கூடாது என
தேடியிருந்தால் இவை
நடந்திடுமோ???
இதுவும் கிறுக்கல்களின் சங்கமமோ???
"கண்களை மட்டுமா
குருடாக்கியது - உன் காதல்
என் வாழ்க்கையையும்
அல்லவா.........?
எதையும் நான்
பார்க்க முடியாத நிலையில்
என்னைப் பார்த்து
சிரிக்கும் பலருக்கு
பதில் சொல்ல முடியாத
கோழையாக............."
பல சந்தர்ப்பங்களில் காதல் உன் கண்களுக்கு போடும் மாயத்திரை அதை நீ எவ்வளவு விரைவில் கண்டு கொள்கின்றாய் என்பதில் தன் தெரியும் உன் முட்டாள் தனமும், கோழைத்தனமும்...................
துஷா
கிறுக்கல்கள் என்பது உண்மை சங்கமமா என்று தெரியவில்லை....... சங்கமம் என்று சொன்னதே ஒரு கிறுக்கல் தானே.
தேவா அண்ணா சொன்னவுடனே கவிதையா எழுதத் தொடங்கிட்டீங்க போல...........
எனக்கும் போட்டியாவா......?
:-))
அண்ணே என்ன சொல்ல வாறீங்க.....பிள்ளை சின்ன பிள்ளை எதையுமே தெளிவா சொல்லணும்...
/Sinthu கூறியது...
அண்ணே என்ன சொல்ல வாறீங்க.....பிள்ளை சின்ன பிள்ளை எதையுமே தெளிவா சொல்லணும்..//
நானும் சின்னப்பிள்ளை..அதான் தெளிவா சொல்லத் தெரியல..
மொக்கை போடும் உங்களுக்கே தெரியல்லையா? என்ன கொடுமை அண்ணா இது
"எதையும் நான்
பார்க்க முடியாத நிலையில்
என்னைப் பார்த்து
சிரிக்கும் பலருக்கு
பதில் சொல்ல முடியாத
கோழையாக............."
அழகான வரிகள்.....
நன்றி என்ற வார்த்தையைத் தவிர வேறு என்ன என்னால் சொல்ல முடியும்............... நன்றி கீதா
\\நான் சின்ன பிள்ளையங்கோ\\ இதை நாங்க நம்பனுமாக்கும்
ஹிஹிஹி........ ஹிஹீஹிஹிஹ்..
///கிறுக்கல்களின் சங்கமம் என்று இதைத் தான் சொல்வார்களோ...........? ///
திருவிளையாடல் படம் பார்த்தீர்களா?
அதிலே விறகுவெட்டி வேடம் தரித்து வரும் சிவாஜி "பாட்டும் நானே பாவமும் நானே" என்று பாடல் பாடுவார். அந்த பாடலினைக்கேட்டு மெய்மறந்து, ஐந்தும்கெட்டு அறிவும்கெட்டு நிற்கும் பாலையாவிடம் சிவாஜி ஒன்றைக் கூறுவார் தெரியுமா? "நான் எங்கே ஐயா பாடினேன்? நான் எதோ வேலைக் களைப்பில் புலம்பினேன்" என்று கூறுவார்.
நீங்கள் அழகான கவிதையை கிறுக்கினேன் என்று கூறும்போது, எனக்கு திருவிளையாடல் சிவாஜிதான் ஞாபகத்துக்கு வருகிறார்.
தொடர்ந்து எழுத வாழ்த்துக்கள்!!!!!!!!!
இது நான் சொன்னது அண்ணா........ அது இயக்குனர் சொல்ல சிவாஜி சொன்னது........ நன்றி........... புகழ்ந்தமைக்கு ஆனால் நான் சொன்னது உண்மையே.....
கவின் அண்ணா நம்பித் தான் ஆகணும்....
நம்புங்க................. நான் சின்ன பொண்ணு தானுங்கோ........... வளருவதற்கு காலம் இருக்கு......
Post a Comment