கார்க்கி அண்ணா முதலிலேயே சொன்ன விடயம் தான். அருமையான சில படங்கள் கிடைத்த படியால் ஒரு பதிவு ஆக்கிவிடலாமே என்று தோன்றியது. அது தான் போடலாமே என்று.
இது அற்ககோல் பானம். இவை தெற்கு ஆசியாவில் வியட்நாமில் உருவாக்கப்பட்டாலும் பொதுவாக தென்கிழக்கு ஆசியாவில் எங்கும் காணலாம் என்று கூறுகிறார்கள். இந்த பாம்பின் நஞ்சே இங்கு பயன்படுத்தப்படுகிறது. ஆனால் இதன் இறைச்சி பயன்படுத்தப் படாத போதும் இதன் நஞ்சு மட்டும் ஒரு திரவத்தில் கரையக்கூடியதாக இருக்கிறது. இவ்வகைப் பாம்பின் நஞ்சானது புரதச் சத்து நிறைந்தது என்றும் கூறுகிறார்கள். வெரி பல சிறிய பாம்புகளையும்,தேள்களையும், பறவைகளையும், சிறிய பூச்சிகளையும் கூட இவர்கள் பயன்படுத்துகிறார்கள்.
எல்லோரும் நல்ல குடிக்கிராங்கப்பா. ஆனால் பாக்கவே பயமாக இருக்கிறது எனக்கு. அதை எப்படிக் குடிக்கிறாங்களோ? எதோ குடிக்கட்டும் எங்களுக்கு என்ன..? ஆனால் ஒரு வெறி வருவதற்கு ஒரு வெறியுடன் குடிக்கிறாங்க என்பது மட்டும் தெரியுது. தேவையில்லாத ஒரு பதிவைப் போட்டு உங்கள் பொன்னான நேரத்தை வீணாக்கியதற்கு மன்னிக்கணும்..........வருகைக்கு
நன்றி...
மேலதிக தகவலுக்கு கார்க்கி அண்ணாவின் தளம் இதோ...
பி.கு:அரிய பானம் என்று சொன்னதால் அருந்திப் பார்க்கலாமே என்று மட்டும் நினைக்க வேண்டாம்..
5 comments:
// அரிய பானம் என்று சொன்னதால் அருந்திப் பார்க்கலாமே என்று மட்டும் நினைக்க வேண்டாம்.. //
நீங்க டேஸ்ட் பண்ணி பார்த்திட்டீங்களா ?
அரிய செய்தி எல்லாம் கொடுத்து சும்மா கலக்குறே சிந்து!!!!
//பாம்புகளையும்,தேள்களையும், பறவைகளையும், சிறிய பூச்சிகளையும் கூட இவர்கள் பயன்படுத்துகிறார்கள்.
எல்லோரும் நல்ல குடிக்கிராங்கப்பா. //
ரொம்பப் பேர் இதை எல்லாம் சாப்பிடுறாங்களே!
//இதன் நஞ்சு மட்டும் ஒரு திரவத்தில் கரையக்கூடியதாக இருக்கிறது//
எங்க ஊரு கசிப்பை விடவா நஞ்சு?
senthil anna
அண்ணா விலை அதிகம் என்பதாலும் சொட்டுச் சொட்ட குடிக்கிறாங்க என்பதாலும் சொன்னேன். இதில வேற எந்த உள்ளார்ந்த பொருளும் இல்லை..
theva anna
ஏதோ சும்மா கிடைத்த செய்தியை உங்களுக்கும் சொல்லலாமே என்று தான் தேவா அண்ணா.
subankan anna
அப்பா நீங்க கசிப்பு எல்லாம் அடிப்பீங்களோ...
வருகைக்கு நன்றி.......
அரிய பானத்தை பற்றிய செய்தி அரிதாகவும் சுருக்கமாகவும் இருந்தது.....
Post a Comment