Friday, January 9, 2009

நட்பு

நண்பன் என்று கழுத்தறுப்பதை - விட
எதிரி என்று நெஞ்சில் - நீ
குத்தியிருந்தால் ..
கொஞ்சமாவது சந்தோசப்பட்டிருப்பேனே...


நட்புக்காய் உயிர் கொடுப்பவர்களும்
நட்புக்காய் உயிர் எடுப்பவர்களும்
இங்கு தானே இருக்கிறார்கள்....?
நட்பு என்பதன் பொருள் மாறாத நிலையில்
நண்பர்கள் மாத்திரம்
நேரத்துக்கு நேரம் மாற்றப்படுவதன்
காரணம் தான்
என்னவோ.................?
என் நட்பு வேண்டும் என்றவுடனே
ஒப்புக்கொண்டதால் தான் என்னவோ
என் நட்பை கீழ்த்தரமாய்
எடைபோட்டுவிட்டாய்.....
போலியான நட்பை நம்பி
நல்ல நட்பை இழந்தவள்
இன்று
நட்புக்கான வரைவிலக்கணம்
தேடி..........
பி.கு: படங்களுக்கும் கவிதை என்று நான் கிருக்கியவைக்கும் சம்பந்தமே இல்லங்க..
வந்ததும் தான் வந்திட்டீங்க ஏதாவது திட்டியேனும் கருத்து சொல்லிட்டு போங்களேன்......
கிறுக்கியவள் (பொறுத்து தான ஆகணும்..)
சிந்து

11 comments:

தேவன் மாயம் said...

போலியான நட்பை நம்பி
நல்ல நட்பை இழந்தவள்
இன்று
நட்புக்கான வரைவிலக்கணம்
தேடி.......///

கொஞ்ச நாளில்
நல்ல நட்பை புரிந்து
கொள்ளலாம். போலி நட்பு
சாயம் வெளுத்து விடும்!!

தேவா..

தேவன் மாயம் said...

உமக்கு
பட்டாம்பூச்சி
விருது
வழங்கப்பட்டு
உள்ளது!!!

Sinthu said...

"thevanmayam கூறியது...
போலியான நட்பை நம்பி
நல்ல நட்பை இழந்தவள்
இன்று
நட்புக்கான வரைவிலக்கணம்
தேடி.......///

கொஞ்ச நாளில்
நல்ல நட்பை புரிந்து
கொள்ளலாம். போலி நட்பு
சாயம் வெளுத்து விடும்!!

தேவா..
"
போலியான நட்பை ஏற்படுத்திக் கிண்டவர்கள் யாவருமே நல்ல நடிகர்கலாயின் என்ன செய்ய............
அவளால் அவள் நண்பியைக் கூட காப்பாற்ற முடியவில்லை............

Sinthu said...

"thevanmayam கூறியது...
உமக்கு
பட்டாம்பூச்சி
விருது
வழங்கப்பட்டு
உள்ளது!!!"
நம்பக்கூடியதாக இல்லையே............ தேவ அண்ணா.............
ஏதாவது நம்பக்கூடியதாக இருந்தால் சொல்லுங்க...........

kuma36 said...

//நட்புக்காய் உயிர் கொடுப்பவர்களும்
நட்புக்காய் உயிர் எடுப்பவர்களும்
இங்கு தானே இருக்கிறார்கள்....//

முடியுமென்றால் Word Verification எடுத்துவிடுங்கள் அது மறுமொழியிடுவதை இலகுவாக்கும்

தேவன் மாயம் said...

உனக்கு பட்டாம்பூச்சி விருது நான் தான் கொடுத்து இருக்கிறேன். என் பதிவு சென்று பட்டாம் பூச்சியை உன் வலையில் ஏற்றிக்கொள்!!
நீ இதனை 3 பேருக்கு கொடுத்துவிடு!!
தேவா...

Sinthu said...

thxs kalai anna, I'll try...


theva anna, thxs.... a lot...

Anonymous said...

பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்த உங்களுக்கு எனது நன்றிகள்.

நீங்கள் யார் என்ற எனக்கு தெரியாது.
தயவு செய்து உங்களை பற்றிய தகவல்களை எனக்கு அனுப்பி வைக்கவும்.
எமது பிறந்த நாள் எப்படி உங்களுக்கு தெரியும்?
உங்கள் பதிலை எதிர் பார்க்கும்
அருண்.

Anonymous said...

நல்ல காலம் நான் உங்க நண்பன் இல்ல...........

Anonymous said...

"நட்பு என்பதன் பொருள் மாறாத நிலையில்
நண்பர்கள் மாத்திரம்
நேரத்துக்கு நேரம் மாற்றப்படுவதன்
காரணம் தான்
என்னவோ.................?"

இதே கேள்வி தான் என்னுள்ளும்.....

Sinthu said...

விடை கிடைக்கும் பொது அறிவிக்கவும்.. keetha