உங்களிடமிருந்து
வாங்கிய அனைத்துக்குமே....
அப்படி என்ன வாங்கிவிட்டேன்
என்று நினைக்கும் போது - கடவுளே
தண்டித்த சந்தர்ப்பங்கள் பல..
புரிந்து கொள்ளாத சந்தர்ப்பங்களில்
புரிந்துகொள்ள வைப்பித்தது
ஒருவர் மட்டுமே
நீங்கள் இல்லை.....
அது ஆண்டவன்
புரிந்து கொள்ளாதது............
உங்களைத் தான்
நன்றி என்ற - ஒரு
வார்த்தையால் மட்டுமே
நன்றியைச் சொல்ல முடியும்...
பட்ட கடனைத்
தீர்க்க முடியாவிட்டாலும்
கடமைப் பட்டிருக்கிறேன்
என்பது மட்டுமே உண்மை
நன்றி மரப்பவள் இல்லை நான்
கடவுளால் தரப்பட்ட - அந்த
அற்புத உறவு இது
நான் செய்த தவத்தாலோ
நீங்கள் செய்த பாவத்தாலோ
உங்கள் மகளாக நான்....
எதையோ எழுத நினைத்து எதையோ எழுதிவிட்டேன். மன்னிக்கணும். கண்டிப்பா கருத்து போடுங்க. திட்டி என்றாலும் பரவாயில்லை. சுதப்பலான பதிவு என்று தெரிந்ததால் தான சொல்கிறேன்...
14 comments:
சிந்து கவிதை ரொம்ப நல்ல இருக்கு
கடவுளால் தரப்பட்டலும் அம்மா என்னும் ஓர் வார்த்தை கடவுளுக்கும் மோலனது, கண்டிக்கும் போதே கண்களில் ஓர் கருணையும், அரவணைக்கும் போதே அன்பில் ஓர் சின்ன எச்சரிக்கையும்,நம்மால் என்ன முடியும் என்பதை நம்மை விட அதிகமாக தெரிந்துகொண்டும்,........................இப்படி சொல்லிக்கொண்டே போகலாம்
என்ன அக்கா கண்டி, பொலிகண்டி என்றீங்க. இலங்கைக்கு போகும் போது கூட்டிக் கொண்டு போறேன் கவலைப்படாதீங்க.. மாதங்கள் இருக்கே... போகலாம் கவலை வேண்டாம்....
இலங்கைக்கு போகும் போது கூட்டிக் கொண்டு போறேன் கவலைப்படாதீங்க.............
நீங்களா என்னையா நம்பவே முடியலை சாமி
நீங்க தானே நிமிடத்திக்கு ஓர் plan போடுறிங்கள் எந்த plan ஜை நம்பி எங்கு போறது நான்
மாற்றம் ஒன்றே மாறாதது கேள்விப்பட்டதில்லையோ.....
சிந்து! எங்கே காதல், நட்பு பற்றி எல்லாம் எழுதி விட்டு அம்மா பற்றி எழுதவில்லை என்று பார்த்தேன்.....நன்றி.....
நல்லா இருக்கு சிந்து,
அம்மாவால் தான் நம்மை புரிந்து கொள்ள முடியும், நமக்கு அது லேட்டாகத்தான் தெரியும்.
கடவுளால் தரப்பட்ட - அந்த
அற்புத உறவு இது
நான் செய்த தவத்தாலோ
நீங்கள் செய்த பாவத்தாலோ
உங்கள் மகளாக நான்....///
ஆழ் மனதிலிருந்து வருகின்றன
வார்த்தைகள்!
தேவா
அம்மாவுக்கு
நாம் ஈடு செய்ய முடியாது!!
அருமய்.. யா அருமய்.......
எல்லா கவிதையும் நல்ல தாங்க இருக்கு சிந்து,,
நன்றி வினோத் அண்ணா... தொடர்ந்து வருக...
நன்றி சாலமன் அண்ணா...
நன்றி செந்தில் அண்ணா.....
அம்மாவின் அன்புக்கு ஈடு ஏது? சின்ன வயதில் நாம் செய்த குறும்புகளையெல்லாம் நினைத்தால்... பாவம் அம்மாக்கள்... கவிதை நன்றாக உள்ளது. வாழ்த்துக்கள்.
Post a Comment