Saturday, January 24, 2009

காதல்....

உன்னை விட்டு நீங்கிய போது
உன் மீதான காதல் மட்டும்
எதற்காக
பல நூறு மடங்காக
பெருகியதோ..

உன்னை நீங்கி
வேறொன்றைக் கற்கையில்
உனக்காகவே மனம்
ஏங்கியது...
அளவு கடந்த
அன்புடன்............

உன்னைக் காதலிக்க
மறந்த எனக்கு நீ
காட்டிய பாடம் தான்
இந்த வேற்று
மொழிக் கட்கையோ..
உன்னைக் நன்கு கற்றதனால்
இன்று
பிற மொழியைக்
கற்கக்கூடியவளாக
இங்கு ......................



பி . கு : இது அந்தக் காதல் கவிதை இல்லீங்கோ. அப்படி என்று நீங்கள் ஏமாந்திருந்தால் நான் பொறுப்பல்ல.........

தமிழ் மீதான பற்று ஆங்கில மட்டத்தில் படிக்கும் பொது நான்கேபுரிகிறது....

9 comments:

தேவன் மாயம் said...

உன்னை விட்டு நீங்கிய போது
உன் மீதான காதல் மட்டும்
எதற்காக
பல நூறு மடங்காக
பெருகியதோ..///

காதல்
கிணற்றுக்குள்
இறங்கி விட்டாயோ
என்று
நினைத்தேன்>>>>

Sinthu said...

அண்ணா நீங்களுமா.........? பலர் நினைப்பார்கள் என்று தெரியும் ஆனால் உங்களிடமிருந்து வரும் என்று நினைக்கவில்லை...

Anonymous said...

அழகான கவிதை. அன்பின் வெளிப்பாடாக அமைந்திருக்கிறது.

குமரை நிலாவன் said...

உன்னை விட்டு நீங்கிய போது
உன் மீதான காதல் மட்டும்
எதற்காக
பல நூறு மடங்காக
பெருகியதோ..

உன்னைக் நன்கு கற்றதனால் இன்று பிற மொழியைக் கற்கக்கூடியவளாக இங்கு

தமிழ் மீது காதல்...
அருமை சிந்து.

kuma36 said...

//உன்னை நீங்கி வேறொன்றைக் கற்கையில்
உனக்காகவே மனம்
ஏங்கியது... அளவு கடந்த
அன்புடன்............///

சிலருக்கு வேறுமொழியை கற்கும் போது தாய் மொழியே மறந்து போகின்ற நிலையில் உங்ளுக்கு அளவு கடந்த அன்பு வந்தது பாராட்ட தக்கதே சிந்து!!
வாழ்க தமிழ்!!!!


தமிழோடு நாம் கொண்ட மேகம்
எந்த ஜென்மதிலும் தீராத தாகம்
தீ வந்து உடல் சுட்ட போதும்
வேகாது வேகாது தமிழ் தேகம்

Sinthu said...

என் கவிதையை விட உங்களது
கவிதை பலமடங்கு..................................
அருமையாக உள்ளது............

Anonymous said...

"உன்னைக் நன்கு கற்றதனால்
இன்று
பிற மொழியைக்
கற்கக்கூடியவளாக
இங்கு ......................"

உண்மை தான்.....

Anonymous said...

//உன்னை விட்டு நீங்கிய போது

உன் மீதான காதல் மட்டும்

எதற்காக

பல நூறு மடங்காக

பெருகியதோ..//
:)

Sinthu said...

thanks Ananth anna and Nilavan anna...

thanks for your smile Kavin anna............