நம்பிக்கைத் துரோகம்
இது நகமல்ல
வேண்டாம் என்ற போது வெட்டிவிட..
தசையடி .....
எதிரி நண்பியாவது நன்மைக்கே
எதிரியை நண்பியாக்கியது
உன் திறமை
நண்பியை எதிரி ஆக்கியது
தீமைக்கே என்பதா?
அறியாதவளாக...
நண்பிக்கு உதவுவதை
உபத்திரமாக கருத்துபவள்
அல்ல அவள்,
அவள் உதவிகளுக்காகவே
நட்பை ஏற்படுத்திக் கொண்டவள் - நீ
பல விடயங்கள் தாமதமாகின
உன் நடிப்பை - அவள்
நட்பாகக் கருதியதால்
எதிரிக்கு கூட உதவும்
அவளது மனம்.
நீ சாதாரணமானவளாகவே
அவளிடம் உதவியை
பெற்றிருக்கலாமே
நண்பியாக நடித்தததன்
நோக்கம்..........?
இதுவரை விடை தெரியாத
அவளுக்கு
விடை சொல்ல - நீ
தயாராக இல்லை
என்பது உண்மை
விடை சொல்லாததன்
காரணம் மட்டுமே அறிந்த - இவள்
உன்னிடமிருந்து விலகி இருப்பதே ......
பி.கு: இந்த கவிதை யாரையும் காயப் படுத்தனும் என்ற நோக்கத்தில் எழுதப் பட்டதல்ல.. நான் வருந்தியதால் மட்டுமே.. எனக்காக நான் எழுதிக்கொண்டது. என்னுடைய மன நின்மதிக்காக.. மட்டுமே எழுதப் பட்டது..
9 comments:
எதிரி நண்பியாவது நன்மைக்கே
எதிரியை நண்பியாக்கியது
உன் திறமை
நண்பியை எதிரி ஆக்கியது
தீமைக்கே என்பதா?
அறியாதவளாக..///
நண்பன் எப்போது எதிரி ஆவான் என்று தெரியாது!!!!!!!!!!!!!!!
இது நண்பி என்பதால் நடக்கலாம் அல்லது நடக்காமலும் இருக்கலாம்..
விடை சொல்லாததன்
காரணம் மட்டுமே அறிந்த - இவள்
உன்னிடமிருந்து விலகி இருப்பதே .///
விலகி இருப்பது மிக்க நன்று...
///எதிரி நண்பியாவது நன்மைக்கே எதிரியை நண்பியாக்கியது உன் திறமை நண்பியை எதிரி ஆக்கியது தீமைக்கே என்பதா?///
நிச்சியமாக நண்பி மட்டும் ஒரு போதும் எதிரியாகிவிட கூடாது, அதில் தீமையே அதிகம்.
நன்றி தேவா அண்ணா, கலை அண்ணா.
ஏழை திடீர் பணக்காரன் ஆகும் வரை...
நண்பன் எதிரியாகும் வரை......
இருவருமே நல்லவர்கள்.
சிந்து என்னம்மா நடந்தது உங்களுக்கு சும்மா பின்னுறீங்க .
ஹிஷாம் அண்ணா உண்மையைச் சொல்லி இருக்கிறீர்கள்..
என் இப்படி எல்லாம் பொய் சொல்றீங்க.. சும்மா எதோ ஒரு புலம்பல். அவ்வளவு தான்..
வருகைக்கு நன்றி..
நடிப்பில் நட்பு இருக்கலாம்.
நட்பில் நடிப்பு இருந்தால் கொஞ்சம்
விலகி இருப்பதே நல்லது சிந்து .
Post a Comment